1. எல்லையில் பதற்றம்: 6 அஸ்ஸாம் போலீசார் உயிரிழப்பு
அஸ்ஸாம் - மிசோரம் எல்லைப்பகுதியில் நிலவி வரும் பதற்றமான சூழல் காரணமாக, 6 அஸ்ஸாம் காவல் துறையினர் உயிரிழந்துள்ளதாக அஸ்ஸாம் மாநில முதலமைச்சர் ஹிமாந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
2. Unlock measure: வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் டெல்லி உயிரியல் பூங்கா திறப்பு
கரோனாவில் இருந்து மீள்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து, டெல்லி உயிரியல் பூங்கா சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காக வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் திறக்கப்படயிருக்கிறது.
3. ISRO spy case: 2 முன்னாள் காவல் துறையினருக்கு கேரள உயர் நீதிமன்றம் இடைக்கால பிணை
விஞ்ஞானி நம்பி நாராயணன் மீது பொய் வழக்கை ஜோடித்து கைது செய்து துன்புறுத்திய முன்னாள் காவல் துறையினரான எஸ். விஜயன் மற்றும் தம்பி எஸ்.துர்கா தத் ஆகிய இருவருக்கும் இரண்டு வார கால பிணை வழங்கி கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது
4. டெல்லி சந்திப்பு: அடிபணிந்த இபிஎஸ்; அதிமுகவில் பதவியோடு ரீஎன்ட்ரி கொடுக்கும் சசிகலா
அதிமுகவில் சசிகலாவுக்கு ஆதரவாக பல்வேறு நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் இருப்பதால் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
5. 'மட்டனுக்கு பெட்ரோல் இலவசம்' - மதுரையில் ஆடி ஆஃபர்
மதுரையில் உள்ள இறைச்சிக் கடை உரிமையாளர் ஒருவர் ஒரு கிலோ ஆட்டுக்கறி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
6. தமிழ்நாட்டில் உள்ள 90 ஐடிஐகளை புனரமைக்க திட்டம் - அமைச்சர் சி.வி. கணேசன்
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில், தமிழ்நாட்டில் உள்ள 90 ஐடிஐக்களையும் புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் தெரிவித்துள்ளார்.
7. பி.இ, பி.டெக் படிப்பில் சேர 25,611 மாணவர்கள் விண்ணப்பம்
பி.இ, பி.டெக் படிப்பில் சேர்வதற்கான முதல் நாளான இன்று 25 ஆயிரத்து 611 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
8. சூர்யாவை நெகிழச் செய்த கேரள ரசிகர்கள்
அயன் படத்தில் வரும் சண்டைக் காட்சி ஒன்றையும், ‘பளபளக்குற பகலா நீ’ பாடலையும் சூர்யாவின் கேரள ரசிகர்கள் மறு உருவாக்கம் செய்து, மறைந்த இயக்குநர் கே.வி. ஆனந்த்-க்கு சமர்ப்பணம் செய்துள்ளனர்.
9. சர்கார் விவகாரம்: ஏ.ஆர். முருகதாஸ் மீதான வழக்கு ரத்து
தணிக்கை முடிந்த திரைப்படம் குறித்து தனி நபர் அல்லது அரசு கேள்வி எழுப்ப அல்லது வழக்கு பதிவு செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதி, அரசியலமைப்பு வழங்கிய பேச்சுரிமைக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை ரத்து செய்வதாக உத்தரவிட்டார்.
10. டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி: மீண்டும் தோற்றது இந்தியா
மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி 0-2 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அணியிடம் வீழ்ந்தது.