ETV Bharat / state

காலை 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 News @ 9AM

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

9AM
9AM
author img

By

Published : Aug 19, 2021, 8:45 AM IST

1. ஆளுநரை இன்று சந்திக்கும் ஓபிஎஸ் - இபிஎஸ்: திமுக அரசுக்கு எதிராக புகார்?

திமுக அரசு மீது புகார் அளிக்க அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் இன்று (ஆக.19) ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேச உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

2. சாதி, மத வேறுபாடின்றி அனைவருக்கும் சம உரிமை - கனிமொழி எம்பி

சாதி, மத வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் சமமான உரிமைகளை திமுக வழங்கிக் கொண்டிருப்பதாக கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.

3. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசு திமுக - எல். முருகன்

தமிழ்நாட்டில் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாகவே திமுக செயல்பட்டுள்ளது என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

4. சட்டப்பேரவையில் உதயநிதி கன்னிப்பேச்சு

மூன்றாவது நாளாக நடைபெற்ற, பட்ஜெட் மீதான விவாதத்தில், இன்று, சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் முதன் முறையாக பேசினார்.

5. கோடநாடு கொள்ளை: சயான் வாக்குமூலத்தால் சிக்கும் எடப்பாடி?

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தூண்டுதலின் பேரில் கொள்ளையை அரங்கேற்றியதாக கோடநாடு கொள்ளை வழக்கின் முதல் குற்றவாளி சயான் அளித்த வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.

6. திருச்சி இளைஞர் கொலை வழக்கு: 3 பேருக்கு ஆயுள் தண்டனை

திருச்சியில் இளைஞர் கொலைசெய்யப்பட்ட வழக்கில் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

7. புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!

புதுச்சேரி மத்திய பல்கலைகழகத்தில் முதுகலை வணிக மேலாண்மை, பன்னாட்டு வணிக மேலாண்மை படிப்புகளுக்கு விண்ணப்பிங்கள் பெறப்பட்டு வருகின்றன.

8. ’நல்லாசிரியர் விருது’ பெறும் புதுச்சேரி அரசுப்பள்ளி ஆசிரியர்!

புதுச்சேரி மணப்பட்டு அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியருக்கு 2021ஆம் ஆண்டின், தேசிய நல்லாசிரியர் விருதினை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

9. 'ஆவணி மூலத்திருநாளே தொழிலாளர் நாளாகக் கொண்டாட வேண்டிய நாள்'

இறைவன் கூலித்தொழிலாளியாக வந்து, வேலை சரியாகச் செய்யவில்லை என்றால் தண்டனை கிடைக்க வேண்டுமென்ற திருவிளையாடலை நிகழ்த்திய ஆவணி மூலத்திருநாளே தொழிலாளர் நாளாகக் கொண்டாடப்பட வேண்டிய நாள் என தருமபுரம் ஆதீனம் பேசியுள்ளார்.

10.தடுப்பூசி போட்டும் கரோனா வந்துடுச்சு: புலம்பும் எவர்கிரீன் நாயகி நதியா

நடிகை நதியா கரோனா தடுப்பூசியின் இரண்டு தவணைகள் செலுத்திய பிறகும், தனக்குத் தொற்று உறுதியாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.