ETV Bharat / state

காலை 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9am

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

9am
9am
author img

By

Published : Dec 11, 2020, 9:01 AM IST

1.'மாற்றுத்திறனாளிகளுக்கான பேருந்து வசதி எப்போது?' - உயர் நீதிமன்றம் அதிருப்தி

சென்னை: அரசுப் போக்குவரத்து கழகங்களுக்கு கொள்முதல் செய்யப்படும் பேருந்துகளில் 10 விழுக்காடு பேருந்துகள் மாற்றுத்திறனாளிகள் பயணிக்க ஏதுவான வசதிகளுடன் கொள்முதல் செய்யப்படும் என்ற தலைமை செயலாளரின் அறிக்கை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

2.பஞ்சாபிலிருந்து 225 கி.மீ. சைக்கிளில் டெல்லிக்குப் பயணம் செய்த விவசாயி

சண்டிகர்: வேளாண் சட்டங்களுக்கு எதிரான டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் விவசாயி ஒருவர் பஞ்சாபிலிருந்து டெல்லிக்கு சைக்கிளில் 225 கி.மீ பயணம் செய்துள்ளார்.

3.‘கட்டுனது அவரு... ஆனா கணக்கு கட்டுனது நானு’ - பொய் கணக்கு காட்டிய வனவர் பணியிடை நீக்கம்!

தேனி: சுருளி அருவியில் தன்னார்வலரால் நன்கொடையாக கட்டித் தரப்பட்ட சமையல் கூடத்தை கணக்கு காட்டி நிதி முறைகேட்டில் ஈடுபட்ட வனவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

4.சென்னை ஐஐடியுடன் கைகோர்த்த விப்ரோ ஜி இ ஹெல்த்கேர்

எம்எஸ் மருத்துவ ஆராய்ச்சி மாணவர்களுக்கான தொழில்துறை வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் விப்ரோ ஜி இ ஹெல்த்கேருடன் சென்னை ஐஐடி கைக் கோர்த்துள்ளது.

5.ராஜஸ்தான் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 9 குழந்தைகள் மரணம்: காரணம் என்ன?

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் கோட்டாவில் உள்ள ஜே.கே. லோன் அரசு மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் ஒன்பது குழந்தைகள் உயிரிழந்துள்ளன.

6.நிலமோசடி வழக்கு: விடுவிக்கப்பட்ட கவுதம் கம்பீர்!

நிலமோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த முன்னாள் கிரிக்கெட் வீரரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம் கம்பீர் அனைத்து குற்றங்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்.

7.ரூ.75,000 கோடி மதிப்பிலான ஏற்றுமதி இலக்கு: வால்மார்ட் அறிவிப்பு

2027ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் ஏற்றுமதியில் சுமார் ரூ.75,000 கோடி பங்களிப்பு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக வால்மார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

8.நடிகர் கிருஷ்ணா மீது மோசடி புகார் கொடுத்த முன்னாள் மேலாளர்!

நடிகர் கிருஷ்ணா தன்னிடம் பணத்தைப் பெற்றுவிட்டு ஏமாற்றிவருவதாக அவரின் முன்னாள் மேலாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

9.நடிகை சித்ரா மரணம் குறித்து செல்போன், சிசிடிவி கேமரா ஆய்வு!

சென்னை: சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் குறித்து, அவரது கணவர் ஹேம்நாத்திடம் 2ஆவது நாள் விசாரணை முடிந்தவுடன் காவல் பாதுகாப்புடன் அனுப்பிவைக்கப்பட்டார்.

10. ஐஎஸ்எல்: கோலின்றி டிராவான ஈஸ்ட் பெங்கால் - ஜாம்ஷெட்பூர் ஆட்டம்!

ஐஎஸ்எல் தொடரில் இன்று நடைபெற்ற ஈஸ்ட் பெங்கால் - ஜாம்ஷெட்பூர் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் கோலேதுமின்றி டிராவில் முடிவடைந்தது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.