ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7PM

author img

By

Published : Nov 9, 2020, 6:57 PM IST

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம் இதோ...

7 மணி செய்தி
7 மணி செய்தி

1. தமிழ்நாட்டில் இன்று மேலும் 2,257 பேருக்கு கரோனா!

தமிழ்நாட்டில் இன்று மேலும் 2,257 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 2,308 பேர் குணமடைந்தனர். 18 பேர் உயிரிழந்தனர்.

2. அண்ணா பல்கலை., இறுதி பருவத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு அட்டவணை வெளியீடு!

சென்னை: செப்டம்பர் மாதம் நடந்த அண்ணா பல்கலைக்கழக இறுதி பருவத்தேர்வினை தொழில்நுட்ப கோளாறு காரணமாக எழுதாத மாணவர்களுக்கான துணைத்தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

3. குட்கா விவகாரம்: டிச. 2இல் இறுதி விசாரணை!

சென்னை: சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டுசென்ற விவகாரத்தில் உரிமைக்குழு அனுப்பிய இரண்டாவது நோட்டீசை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக உறுப்பினர்கள் தொடர்ந்த வழக்கில் டிசம்பர் 2ஆம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

4. 7.5% உள் இட ஒதுக்கீடு: அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் குறித்த தகவலை கோரிய நீதிமன்றம்!

சென்னை : கடந்த 3 ஆண்டுகளில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்ற எத்தனை மாணவர்கள் மருத்துவ இடங்களில் சேர்ந்துள்ளனர் ? என்பது குறித்த விவரத்தை கூடுதல் மனுவாக தாக்கல் செய்ய மனுதாரருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

5. அண்ணா பல்கலைகழகத்தின் உதவிப் பேராசிரியர் நியமனம் குறித்த அறிவிப்பு ரத்து : சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அண்ணா பல்கலைகழகத்தின் ஒப்பந்த அடிப்படையிலான உதவிப் பேராசிரியர் நியமனம் குறித்த அறிவிப்பை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

6. கரோனா மூன்றாவது அலை? ஆபத்தில் டெல்லி!

டெல்லி: டெல்லியில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று ஒரே நாளில் ஏழாயிரத்து 745 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

7. ஹரியானாவில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி!

சண்டிகர்: ஹரியானாவில் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.

8. பிகாரையும் விட்டுவிடக் கூடாது... களமிறங்கிய முக்கிய காங். தலைவர்கள்

பாட்னா: மத்தியப் பிரதேசம், மணிப்பூரில் பாஜகவிடம் ஆட்சியைப் பறிகொடுத்தது போன்று பிகாரையும் விட்டுவிடக் கூடாது என்பதற்காக அதிரடி வியூகங்களை வகுக்க இரு முக்கியத் தலைவர்களைக் காங்கிரஸ் கட்சி களமிறக்கியுள்ளது.

9. ஆஸ்திரேலிய தொடரில் ரோஹித் ஷர்மா இருப்பார்

துபாய்: ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியில் ரோஹித் ஷர்மா நிச்சயம் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

10. சென்னை சர்வதேசத் திரைப்படவிழாவின் புதிய தேதிகள் அறிவிப்பு
சென்னை: தள்ளிவைக்கப்பட்ட சென்னை சர்வதேசத் திரைப்படவிழாவின் புதிய தேதிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.