ETV Bharat / state

காலை 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7AM

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம் இதோ..

காலை 7 மணி செய்தி
காலை 7 மணி செய்தி
author img

By

Published : Apr 27, 2021, 7:08 AM IST

1.மழலைகளை மகிழ்விக்க வரும் ஈடிவி பால பாரத்...

ஈடிவி நிறுவனத்தின் ஒரு அங்கமாக தொடங்கப்படவுள்ள பால பாரத் தொலைக்காட்சி, மழலைகளை மகிழ்விக்க காத்துக் கொண்டிருக்கிறது.

2. தமிழ்நாட்டில் 15 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் 15 ஆயிரத்து 684 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில். ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 145 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

3.இலவச கரோனா தடுப்பூசி செலுத்தக்கோரிய வழக்கு ஒத்திவைப்பு

மதுரை: தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு போர்க்கால அடிப்படையில் இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்த கோரிய வழக்கை ஜூன் முதல் வாரத்திற்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

4.முழு ஊரடங்கால் இரவு உணவிற்கு சிரமம்: அத்தியாவசிய பணியாளர்கள்!

சென்னை: ஞாயிறு ஊரடங்கில் இரவு நேரத்தில் உணவு கிடைக்காமல் அத்தியாவசிய பணியாளர்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டனர்.

5.ஸ்டெர்லைட்டுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்: 11 பேர் கைது

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, 11 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

6. மே.வங்க 7ஆம் கட்ட தேர்தல்: சக்கர நாற்காலியில் வாக்களிக்க வந்த முதலமைச்சர்!

மேற்கு வங்கத்தில் ஏழாம் கட்டமாக 34 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. இதில் சக்கர நாற்காலியில் வந்து முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது வாக்கினை பதிவுசெய்தார்.

7. வெடித்து சிதறிய நீர்மூழ்கி கப்பல் - 53 மாலுமிகள் உயிரிழப்பு!

பசிபிக் கடற்பரப்பில் காணாமல் போன இந்தோனேசிய நீர்மூழ்கிக் கப்பல் மூன்று துண்டுகளாக சிதறிய நிலையில் கடலுக்குள் காணப்படுவதாக இந்தோனேசிய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்

8.புதுச்சேரியில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு!

புதுச்சேரியில் ஏப்ரல் 30 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

9.ட்விட்டரில் ட்ரெண்டாகும் 'அன்றே சொன்ன ரஜினி'!

கரோனா தொற்றின் இரண்டாவது அலை குறித்து ரஜினி சொன்ன கருத்து ட்விட்டரில் அன்றே சொன்ன ரஜினி என்று ட்ரெண்டாகி வருகிறது.

10.இந்திய வீரர்கள் ஐபில் போட்டிகளில் பிசியான நேரத்தில் மக்கள் நாயகனாக வலம்வரும் ஆஸி வீரர்!

பிராணவாயு விவகாரத்தில் தத்தளித்துவரும் இந்தியாவிற்கு, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான பேட் கம்மின்ஸ் 37 லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.