ETV Bharat / state

5 மணி செய்தி சுருக்கம் Top 10 news @ 5pm - ETV BHARAT TOP 10 NEWS

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்தி சுருக்கம்

5 மணி செய்தி சுருக்கம் , TOP 10 NEWS
5 மணி செய்தி சுருக்கம்
author img

By

Published : Jul 27, 2021, 5:13 PM IST

1. கலாம் நினைவு நாள்: ராமோஜி ஃபிலிம் சிட்டியில் மரக்கன்று நட்டார் அமிதாப்

படப்பிடிப்புகாக ராமோஜி ஃபிலிம் சிட்டிக்கு வந்த பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

2. விசாரணைக்கு ஆப்சென்ட் ஆன அமைச்சர் செந்தில் பாலாஜி - காட்டம் தெரிவித்த நீதிபதி

தமிழ்நாடு போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஆகஸ்ட் 8ஆம் தேதி நேரில் ஆஜராக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

3. ராகுல் காந்தியின் டிராக்டர் பேரணி குறித்து டெல்லி போலீசார் விசாரணை

காங்கிரஸ் முக்கியத்தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி டிராக்டர் பேரணி நடத்தியது தொடர்பாக, டெல்லி காவல் துறையினர் ராகுல் காந்தி மீதான விசாரணையைத் தொடங்கியுள்ளது.

4. பெகாசஸ் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தை நாடிய மூத்த பத்திரிகையாளர் என்.ராம்

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள பெகாசஸ் விவகாரம் தொடர்பாக, மூத்த பத்திரிகையாளர்களான என் ராம், சசிகுமார் இருவரும் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

5. பாண்டியாவுக்கு கரோனா - தனிமைப்படுத்தப்பட்ட இந்திய அணி; டி20 போட்டி ஒத்திவைப்பு!

இந்திய அணி வீரர் குர்னால் பாண்டியாவுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய அணி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

6. துப்பாக்கிச் சுடுதல் ஏர் பிஸ்டல்: வெறுங்கையுடன் திரும்பியது இந்தியா!

துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் பங்கேற்ற இரு அணிகளில் மனு - சௌத்ரி இணை இரண்டாவது சுற்றிலும், யஷஸ்வினி சிங் - அபிஷேக் அணி முதலாவது சுற்றிலும் தோல்வியடைந்து வெளியேறியது.

7. 'ஆறு வாரங்களில் தடுப்பூசிகளின் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது' - ஆய்வில் தகவல்

ஃபைசர், அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளை முழுமையாக செலுத்திக்கொண்டவர்களுக்கு ஆறு வாரங்களுக்குப் பிறகு நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு குறைய தொடங்குவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

8. 'ஜூனியர் மீராபாய் சானு' - இணையத்தைக் கலக்கிய தமிழ்நாட்டு வீரரின் மகள்!

மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்ற பளுதூக்கும் வீடியோவை, சிறுமி ஒருவர் மறு உருவாக்கம் செய்து அசத்தியுள்ளார்.

9. Once Upon A Time In Calcutta: வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவுக்கு செல்லும் ஒரே இந்தியப் படம்!

நவீன தாராளமயக் கொள்கையால் எளிய மக்கள் படும் துயரத்தை விவரிக்கும் இத்திரைப்படம் வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுவதற்கு தேர்வாகியுள்ளது.

10. ஹிப்ஹாப் ஆதியின் யூ-டியூப் சேனல் மீட்பு

ஹிப்ஹாப் ஆதி தனது யூ-டியூப் சேனல் மீண்டும் மீட்கப்பட்டுவிட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.