ETV Bharat / state

3 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @3PM - ETV BHARAT TOP 10 NEWS

ஈடிவி பாரத்தின் மாலை 3 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்...

3 மணி செய்திச்சுருக்கம்
3 மணி செய்திச்சுருக்கம்
author img

By

Published : Oct 17, 2021, 3:43 PM IST

1. அதிமுக பொன் விழா..! கொடியேற்றி கொண்டாட்டம்

அதிமுக தொடங்கி 49 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், 50ஆவது ஆண்டு தொடக்க நாளான இன்று கட்சி கொடியேற்றி அதிமுக தொண்டர்கள் கொண்டாடினர்.

2. மகன் துரை வையாபுரிக்கு பதவி? - வைகோ சொன்ன பதில்

தனது மகன் துரை வையாபுரிக்கு கட்சியில் பதவி வழங்கவேண்டும் என சில மாவட்ட செயலாளர்கள் தீர்மானம் நிறைவேற்றிவுள்ளதாகவும், இதற்கான முடிவு அக்.20 ஆம் தேதி நடக்கும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்படும் எனவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

3. சென்னை டூ திருவள்ளூர் சைக்கிளிங் செய்து ஆய்வு செய்த டிஜிபி!

சென்னையிலிருந்து திருவள்ளூருக்கு 45 கிலோ மீட்டர் சைக்கிளிங் பயணம் மேற்கொண்டு தீயணைப்புத்துறை அலுவலகம், காவல் நிலையத்தில் ஆய்வு செய்து குறைகளைக் கேட்டறிந்தார் டிஜிபி சைலேந்திர பாபு.

4. நவராத்திரி கொண்டாட்டம்: புதுச்சேரியில் கண்கவர் ’தாண்டியா’ நடனம்!

நவராத்திரி உத்சவ் நிகழ்ச்சியில் ஏராளமான வெளிமாநிலத்தவர்கள் கலந்துகொண்டு ஆடிய தாண்டியா நடனம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

5. தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் ஏழு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

6. நாயை வேட்டியாடிய சிறுத்தை - வெளியான சிசிடிவி காட்சிகள்

குன்னூரில் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று நாயை வேட்டையாடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, காண்போரை பதைபதைக்க செய்துள்ளன.

7. மளமளவென உயரும் பெட்ரோல் விலை

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 103.01 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

8. துப்பறியும் நாய் டயானா உடல் 21 குண்டுகள் முழங்க அடக்கம்

காவல்துறையில் பணியாற்றி உயிரிழந்த டயானா மோப்ப நாயின் உடல் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.

9. வாணியம்பாடியில் மான் இறப்பு குறித்து விசாரணை

வாணியம்பாடி அருகே மர்மமான முறையில் மூன்று வயது மான் உயிரிழந்துள்ளது.

10. மனைவியை கொடுமைப்படுத்திய பிக்பாஸ் போட்டியாளர்!

பிக்பாஸ் சீசனில் பங்கேற்று வரும் அபிஷேக் தன்னை அடித்து துன்புறுத்தியதாக அவரது மனைவி கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.