1.பேருந்து சேவை, கோயில்கள், துணிக் கடைகள் திறப்பு.. வேறு எதற்கெல்லாம் அனுமதி?
தமிழ்நாட்டில் ஊரடங்கில் இன்று முதல் புதிய தளர்வுகள் அமலுக்கு வருகின்றன. கரோனா தொற்று பாதிப்பின் அடிப்படையில் மாவட்டங்கள் வகை 1, 2, 3 என பிரிக்கப்பட்டு இந்த தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
2.23 மாவட்டங்களில் துணி, நகை கடைகளை திறக்க அனுமதி
தமிழ்நாட்டில் 23 மாவட்டங்களில் துணிக்கடைகள், நகை கடைகளை இன்று முதல் (ஜூன் 28) திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
3.புதிய டிஜிபி யார்... சின்ஹாவா, சைலேந்திரபாபுவா? - டெல்லியில் இன்று ஆலோசனை
தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு புதிய டிஜிபியாக (காவல் துறைத் தலைவர்) யாரைத் தேர்ந்தெடுப்பது என்பது குறித்து ஆலோசிக்க மாநிலத் தலைமைச் செயலர், உள் துறைச் செயலர் ஆகியோர் டெல்லி விரைந்தனர்.
4.'களைகட்டிய காஞ்சி' - கோயில்கள் திறப்பு.. பக்தர்கள் மகிழ்ச்சி..
ஊரடங்கு தளர்வுகளை தொடர்ந்து 48 நாள்களுக்கு பிறகு காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோயில்கள் திறக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
5.'மணமக்களுக்கு மண் அடுப்பு; அரசுக்குப் படம் எடுப்பு' - நண்பர்கள் தந்த பரிசும் பாடமும் அடடே!
பெட்ரோல், டீசல், எரிவாயு விலை அதிகரிப்பை உணர்த்தும் வகையில் மணமக்களுக்கு நண்பர்கள் மண் அடுப்பு வழங்கி, அதன்மூலம் மக்களின் கோபத்தை அரசுக்கு ஒரு பாடமாக உணர்த்தியுள்ளனர்.
6.ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு தொடங்கிய பேருந்து சேவை
கரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், மாவட்டத்தில் 50 விழுக்காடு பயணிகளுடன் பேருந்து சேவை தொடங்கியுள்ளது.
7.'ஸ்டாலினுக்கு நன்றி!' - ஊடகச் சுதந்திரத்துக்கான கூட்டணி அமைப்பு
செய்தி ஊடகங்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என அறிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு ஊடகச் சுதந்திரத்துக்கான கூட்டணி அமைப்பினர் நேற்று (ஜூன் 27) நேரில் சென்று நன்றி தெரிவித்தனர்.
8.இந்தியாவில் மேலும் 46 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 58 ஆயிரத்து 578 பேர் குணமடைந்துள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
9.இலங்கை அகதி பெண்ணிடம் பாலியல் வன்புணர்வு: இருவர் கைது
காரிமங்கலம் அருகே இலங்கை அகதி பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்தவரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.
10.தயவு செய்து இப்படி செய்யாதீங்க - ரசிகர்களுக்கு அன்புக்கட்டளை போட்ட ராஷ்மிகா
ரசிகர்கள் யாரும் தன்னைக் காண தயவுசெய்து தொலை தூரத்திலிருந்து வராதீர்கள் என நடிகை ராஷ்மிகா மந்தனா கேட்டுக்கொண்டுள்ளார்.