ETV Bharat / state

காடுகளின் கவசம் யானைகள்! - ஈடிவி பாரத் தமிழ்நாடு யானைகள் கட்டுரை

காட்டை காக்கும் யானைகளுக்கு மனிதர்கள் எதிரியாக இருப்பது குரூரமானது. இந்த குரூர நிலையை மனிதர்கள் மாற்றிக்கொள்ளாவிட்டால், ஆறறிவு என்று சொல்லிக்கொள்வதில் அர்த்தமேதும் இல்லை.

காடுகளை காக்கும் அரசன்
காடுகளை காக்கும் அரசன்
author img

By

Published : Jul 15, 2020, 3:57 AM IST

இந்தியாவின் பண்டைய வரலாற்றில் அர்த்தசாஸ்திரம், ராமாயணம், மகாபாரதம் தொடங்கி பல்வேறு பதிவுகளில் மலைக்க வைக்கும் அளவுக்கு யானைகள் பற்றிய குறிப்புகளை காண முடிகின்றன. இலக்கியப் பிரதிகள் தொடங்கி பிரிட்டிஷாரின் குறிப்புகள்வரை எல்லாவிடங்களிலும் கம்பீரமான இடங்களில் யானைகள் உள்ளன. வீரத்தின் அடையாளம் யானைகள் என கருதப்பட்டதில் வியப்பேதுமில்லை.

அரசர்களுக்கு யானைகள் அவசியம் என்பதால் யானைகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. யானைகளைப் பாதுகாப்பதற்காகவேனும் அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாக்கவேண்டியிருந்தது. ஆக, யானைகளுடனான அரசர்களின் உறவு என்பது தவிர்க்கவியலாதபடி அமைந்தது. யானைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்ததன்மூலம் அரசர்கள் போர்க்களத்தில் வெற்றிபெற முடிந்தது. அதனாலேயே கதைகள், பாடல்கள், சிற்பங்கள், ஓவியங்கள் என அனைத்திலும் அரசர்கள் யானைகளுக்கு முக்கிய இடம் கொடுத்தனர்.

தற்போது யானைகளுக்கு நாம் மதிப்பளிக்கிறோமா? மதிப்பளிக்கக்கூட வேண்டாம் பாதுகாக்கவேனும் செய்கிறோமா என்றால் இல்லை அதுதான் பதில். கோயம்புத்தூர் மாவட்டம் மதுக்கரை வனப்பகுதியில் 2016 ஜுன் 19ஆம் தேதி மகாராஜா என்னும் ஒரு காட்டு யானை அவ்வப்போது ஊருக்குள் புகுந்து பயிர் நிலங்களை சாப்பிட்டு வந்தது.

அது ஏன் ஊருக்குள் வந்து பயிர்களை சாப்பிட்டது ( உண்மையில் யானையா ஊருக்குள் வந்தது) என்பதை யோசிக்காமல், அதனை பிடிக்க ‘ மிஷன் மதுக்கரை மகாராஜா’ என்ற நடவடிக்கையின் மூலம், நான்கு கும்கி யானைகளின் உதவியோடு, மகாராஜா என்ற அந்த ஆண் யானையை வலுக்கட்டாயமாகப் பிடித்து வனத்துறையினர் லாரியில் ஏற்றினர்.

அங்கிருந்து பல மணி நேரப் பயணங்களுக்குப் பின்னர், டாப்சிலிப்பில் உள்ள வரகளியாறு முகாமில் ஏற்கனவே தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த இரும்புக் கூண்டில் மகாராஜா அடைக்கப்பட்டது. திடீரென மகாராஜா யானை 2016 ஜுன் 22ஆம் தேதி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். யானையின் இறப்பிற்கு அதிகளவு மயக்க மருந்து செலுத்தியது காரணம் என விலங்கியல் ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டினர். அதற்கு கால்நடை மருத்துவர்கள் அந்த யானை, கூண்டின் கம்பிகளில் தொடர்ந்து பலமாக முட்டியதால், தலையின் எலும்புகள் நொறுங்கி இறந்துவிட்டதாக உடற்கூறு ஆய்வு அறிக்கை வெளியிட்டனர்.

கேரளாவில் வீடுகளில் வளர்க்கும் அளவுக்கு யானை - மனித பந்தம் அதிகம். ஆனால் அங்கும் தொடர்ச்சியாக யானைகள் கொள்ளப்படுகின்றன.கொடுமையிலும் கொடுமை என்னவென்றால் கர்ப்பிணி யானைக்கு அன்னாசி பழத்தில் வெடி வைத்து கொன்றது. 2020 மே 30ஆம் தேதி பாலக்காடு பகுதியில் உள்ள வெள்ளியாற்றில் காட்டு யானை ஒன்று இறந்தது. யானையின் இறப்புக்கான காரணத்தை மலப்புரம் மாவட்ட வன அலுவலர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டவுடன், அந்தத் தகவல் பொதுமக்களின் நெஞ்சை உலுக்கியது.

காட்டு யானை உணவு தேடி கிராமத்திற்கு வந்த நிலையில், யாரோ வெடி பொருட்கள் மறைத்து வைத்த அன்னாசி பழத்தை உணவாக வைத்துவிட்டு சென்றுள்ளனர். பழத்தை கடிக்கும் போது வெடி மருந்து வெடிக்க, அதன் வாய் மற்றும் தாடை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. வலியுடன் கிராமத்தின் தெருக்களில் ஓடியபோதும் யானை யாரையும் தாக்கவில்லை, எந்த சேதாரத்தையும் ஏற்படுத்தவில்லை.

காயத்தின் மீது ஈ உள்ளிட்ட பூச்சிகள் அண்டாமல் இருக்க, யானை ஆற்றில் நின்று தண்ணீரை வாயில் தெளித்துக்கொண்டே இருந்தது. தகவல் அறிந்த வனத்துறையினர் சுரேந்திரன், நீலகந்தன் என்ற இரு கும்கி யானைகளை அழைத்துச் சென்று, காட்டு யானையை மீட்டனர். ஆனால், அந்த யானை உயிரிழந்தது. உடற்கூறு ஆய்வு அறிக்கையில் இறந்தது கர்ப்பிணி யானை எனவும் இன்னும் 18 அல்லது 20 மாதங்களுக்குள் குட்டியை பிரசவிக்கும் நிலையில் இருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும் வெடிபொருள் வாய் மற்றும் தாடையில் ஏற்படுத்திய படுகாயத்தால் அந்த யானை உணவு உட்கொள்ளாமல் இருந்துள்ளது எனவும் கூறினர். இப்படி சில ஆண்டுகளாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா என அனைத்து மாநிலங்களிலும் யானைகள் சாலை, ரயில் விபத்தில் உயிரிழப்பதும், மனிதர்கள் அதை காயப்படுத்தியும், கொன்றுவருவதும் தொடர் கதையாகியுள்ளது.

இதுபோதாதென்று காட்டிலுள்ள பல யானைகள் பிடிக்கப்பட்டு வளர்ப்பு யானையாகவும், கும்கி யானையாகவும் மாற்றப்படுகின்றன. ஒரு மனிதனை நாட்டிலிருந்து காட்டிற்கு கடத்தினால் அவன் தாங்குவானா என்பதை யாரேனும் சிந்தித்து பார்க்க வேண்டும். அனைத்து உயிர்களுக்கும், உணர்வும், வலியும் ஒன்றுதானே.

இந்தியாவில் இருக்கும் மொத்த யானைகளில் சரிபாதி தென் இந்தியாவில் இருக்கின்றன. குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா வனங்களை இணைக்கும் மேற்குத்தொடர்ச்சி மலையில் வாழ்கின்றன. மனிதர்களைபோல் யானைகள் சிறிய இடத்தில் வசிக்காது. ஏன்னென்றால் ஒரு நாளைக்கு 250 கிலோ உணவையும், 150 லிட்டர் தண்ணீரையும் யானைகள் உட்கொள்ளும்.

அவ்வாறு இடம்பெயரும்போது யானைகள் பயன்படுத்தும் வழிக்கு பெயர் வலசை பாதை (elephant corridor). இப்பாதை ஆக்கிரமிக்கப்படாதவரை யானைகள் ஊருக்குள் வந்ததில்லை. தற்போது மனிதர்கள் அந்த வலசை பாதையை ஆக்கிரமிப்பு செய்து வீடுகள், சாலைகள், ரயில் தண்டவாளங்கள் உள்ளிட்டவற்றை அமைத்துள்ளனர்.

ஆனால், அவை வழக்கம்போல் தன்னுடைய பாதையை பயன்படுத்துகின்றன. அப்போது விவசாய நிலத்தில் உள்ள பயிர்களை சாப்பிடுகின்றன. இவ்வாறு மீண்டும் மீண்டும் அப்பகுதிகளுக்கு வரும்போதுதான், மனிதர்கள் யானைகள் மீது மோதலை தொடுக்கின்றனர்.

யானைகள்தான் காடுகளின் கவசம். புதர் மண்டிய இடங்களில் புதிய பாதையை யானைகள் அமைத்து மற்ற உயிரினங்களுக்கு உணவு தேடிச் செல்லும் வகையில் உதவுகிறது. யானைகள் உண்ணும் உணவுகளில் 50 விழுக்காடு மட்டுமே செரிமானம் ஆவதால் அதன் கழிவுகள் மூலம் காடுகளில் புதியாத செடி, கொடிகள் முளைக்கின்றன. இதனால் காடுகளின் வளம் பாதுகாக்கப்படுகிறது. இப்படி காட்டை காக்கும் யானைகளுக்கு மனிதர்கள் எதிரியாக இருப்பது குரூரமானது.

இந்த குரூர நிலையை மனிதர்கள் மாற்றிக்கொள்ளாவிட்டால், ஆறறிவு என்று சொல்லிக்கொள்வதில் அர்த்தமேதும் இல்லை.

இதையும் படிங்க: 'யானைகள் இறப்பு குறித்து தவறான தகவல்கள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை பாயும்'

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.