1. நாடு முழுவதும் சாலை மறியல்
’சக்கா ஜாம்' என்ற பெயரில் நாடு முழுவதும் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் விவசாயிகளின் சாலை மறியல் போராட்டம் இன்று நடைபெறுமென டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
2. மே.வங்கத்தில் ரத யாத்திரையைத் தொடங்கிவைக்கும் நட்டா
மேற்கு வங்க மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, அம்மாநிலத்தில் இன்று ரத யாத்திரையைத் தொடங்கிவைக்கிறார்.
3. சுற்றுலாத் தலங்கள் திறப்பு
கரோனா பரவல் காரணமாகச் சுற்றுலாப் பயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்த சாஸ்தா கோயில், கோவிலாறு சுற்றுலாத் தலங்கள் இன்றுமுதல் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்காகத் திறக்கப்படுகிறது.
4. ஐஐடி கேட் தேர்வு 2021
ஐஐடி கேட் நுழைவுத் தேர்வில் இன்று சிவில் பொறியியல், இன்ஸ்ட்ரூமென்டேஷன் பொறியியல், உயிரி மருத்துவப் பொறியியல், சுரங்கப் பொறியியல், இயற்பியல், வேதியியல் பிரிவுகளுக்கான தேர்வு நடைபெறுகிறது.
5. சென்னை டெஸ்ட்
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 263 ரன்களுடன் இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடரவுள்ளது.