நாளை நீட் தேர்வு
நாடு முழுவதும் 2020-2021ஆம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவப் படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நாளை (செப்.13) நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 14 நகரங்கள் உள்பட, நாடு முழுவதும் 154 நகரங்களில் 3 ஆயிரத்து 842 மையங்களில் நடக்கிறது. மொத்தம் 15.97 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.
23 புதிய மசோதாக்கள் அறிமுகம் செய்ய திட்டம்
மக்களவை மழைக்கால கூட்டத்தொடர் வரும் 14ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 1ஆம் தேதி வரை 18 நாள்கள் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தாடரில் 23 புதிய மசோதாக்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் 11 மசோதாக்கள் அவசர சட்டமாக இயற்ற முடிவு செய்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரிய பொதுக்குழு கூட்டம் தள்ளிவைப்பு
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் கரோனா பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. கூட்டம் நடத்தப்படும் தேதி குறித்து பின்னர் தெரிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இசையரசி சுவர்ணலதா
பின்னணி பாடகி சுவர்ணலதா இறந்த தினம் இன்று. 1980-90களில் தன் சொக்கவைக்கும் குரல்வளத்தால் பலரது சோகத்தை மறைய வைத்தவர் சுவர்ணலதா. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, பஞ்சாபி என பல்வேறு மொழிகளில் பாடியுள்ளார்.
ஓப்போ எஃப்17 விலை அறிவிப்பு
வாடிக்கையாளரை கவரும் வகையில் ஓப்போ நிறுவனம் எஃப்17 மற்றும் எஃப்17 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் இந்திய விலையை அறிவித்துள்ளது.