1. 80 வயதானோர், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கடைசி நாளான இன்று (ஏப். 5) மட்டும் அஞ்சல் வாக்குப் பெறப்படும் எனத் தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
![தபால் வாக்கு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11281021_aaaa.jpg)
2. கரோனா பாதிப்பு காரணமாக ஜம்மு-காஷ்மீரில் 2 வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
![பள்ளிகளுக்கு விடுமுறை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11281021_a.jpg)
3. தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு இன்று இறுதிக்கட்ட பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.
![ஆசிரியர்களுக்கு பயிற்சி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11281021_aa.jpg)
4. முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் இன்று வாக்குச்சாவடிக்கு சென்று வர 'ஊபர்' நிறுவனம் இலவச பயண சேவையை வழங்க உள்ளது.
![ஊபர் நிறுவனம் இலவச பயண சேவை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11281021_aaa.jpg)