ETV Bharat / state

ஊராட்சி நிர்வாக பணிகளை திறம்பட செயல்படுத்த 5 குழுக்கள் அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு! - கிராம நிர்வாக பனி

சென்னை: கிராம ஊராட்சி நிர்வாக பணிகளை திறம்பட செயல்படுத்த, நியமனக்குழு, வளர்ச்சி குழு, வேளாண்மை மற்றும் நீர்வள மேலாண்மை குழு, பணிகள் குழு, கல்விக் குழு என ஐந்து குழுக்களை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Establishment of 5 Committees for effective implementation of Grama Panchayat Administration
தலைமை செயலகம்
author img

By

Published : Oct 27, 2020, 4:05 AM IST

கிராம ஊராட்சி நிர்வாக பணிகளை திறம்பட செயல்படுத்த ஐந்து குழுக்கள் அமைக்க வேண்டும் என்று கே.எஸ். பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், மூன்றடுக்கு ஊராட்சி அமைப்புகளுள் மிக முக்கியமான அமைப்பான ஊரகப் பகுதி மக்களுடன் நேரடித் தொடர்பிலுள்ள கிராம ஊராட்சி நிர்வாகம் அதிக அளவிலான பணிகளைக் கொண்டுள்ளது. அப்பணிகளை திறம்பட செயல்படுத்துவதற்கு ஏதுவாகவும், அதன் அனைத்து செயல்பாடுகளிலும் வெளிப்படை தன்மை நிலவ வேண்டும் என்ற நோக்கத்துடனும், கிராம ஊராட்சி நிர்வாகத்திற்கு உதவிடும் வகையில் கிராம ஊராட்சி அளவில் கீழ்காணும் 5 குழுக்களை அமைப்பதற்கான வழிமுறைகளை வகுத்து அரசாணையில் தமிழ்நாடு அரசு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

கிராம ஊராட்சி குழுக்கள், நியமனக்குழு, வளர்ச்சி குழு, வேளாண்மை மற்றும் நீர்வள மேலாண்மை குழு, பணிகள் குழு, கல்விக் குழு ஆகியவற்றை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தக் குழுக்கள், மக்கள் நலம், சுகாதாரம், குடிநீர் சார்ந்த சமுதாய சொத்துக்களைப் பராமரித்தல், தரம் உயர்த்துதல். தொற்றுநோய் பரவாமல் தடுக்கும் வகையில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையங்களை மேற்பார்வையிடுதல்.

நோய்த்தடுப்பு, தடுப்பூசி முகாம்கள் நடத்துதல். மக்கள் நலம், குடிநீர் மற்றும் கிராம சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு முகாம்கள் நடத்துதல்.

ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள துணை சுகாதார நிலையம், இதர சுகாதார நிலையங்களை பார்வையிட்டு அவற்றின் பணிகளை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகள் வழங்குதல்.‌

குடிநீர் வழங்கல் தொடர்பான பராமரிப்பு பணிகளில் , பயன்பெறுவோரின் பங்கேற்பினை அதிகரித்தல் போன்ற பணிகளைச் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.