ஈரோடு மாவட்ட கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கருதாம்பாடி புதூரை சேர்ந்தவர்கள் தனசேகர், பழனிசாமி. இவர்கள் இருவரும் மரம் ஏறும் தொழில் செய்துவருகின்றனர். இவர்கள் இருவரும் தங்களுக்கு சொந்தமான இடத்தில் குடிசை வீடு அமைந்து அதில் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று இவர்கள் இருவரும் மரம் ஏறி கொண்டுவந்த பதநீர்களை காய்ச்சி கருப்பட்டி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தீத்துகள்கள் அவர்களது குடிசை வீடுகள் மீது விழுந்து தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த இருவரும் இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தினால் தனசேகர், பழனிசாமி ஆகியோர்களின் இரு கூரை வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. இந்த விபத்தில் வீட்டு உபயோகப் பொருட்கள், பல முக்கிய ஆவணங்கள், ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள், பழனிசாமியின் வீட்டிலிருந்த ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், ஆறு சவரன் கோயில் தங்க நகையும் எரிந்து சாம்பலாகின.
இதையும் படிங்க: நீலகிரியில் பறவைகளின் வலசை பயணம் தொடங்கியது!