ETV Bharat / state

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஆளும் திமுக கட்சி தேர்தல் விதிமுறைகளை மீறுகிறது: ஜெயக்குமார் தாக்கு! - DMK ADMK

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆளும் திமுக கட்சி தேர்தல் விதிமுறைகளை மீறி வருவதாக அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஆளும் திமுக கட்சி தேர்தல் விதிமுறைகளை மீறுகிறது: ஜெயக்குமார்

author img

By

Published : Feb 10, 2023, 6:33 PM IST

Updated : Feb 10, 2023, 8:32 PM IST

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஆளும் திமுக கட்சி தேர்தல் விதிமுறைகளை மீறுகிறது: ஜெயக்குமார் தாக்கு!

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் ஆளும் கட்சி தேர்தல் விதிமுறைகளை முறையாக பின்பற்றவில்லை என்று புகார் அளித்தார்.

அதன் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது, 'ஈரோடு கிழக்கு சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தல் நடக்க உள்ள சூழ்நிலையில் ஆளும் திமுக அரசு ஜனநாயக அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது' எனத் தெரிவித்தார்.

'நேற்று அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்ற நிலையில், அந்த கூட்டத்திற்கு யாரும் செல்லக் கூடாது என்பதற்காக அதைத் தடுக்க பல இடங்களில் சட்ட விரோதமாக பந்தல்கள் அமைத்து ரூ.1000 பணம், உணவு கொடுத்தார்கள். இது திருமங்கலம் பார்முலாவை மிஞ்சும் அளவுக்கு உள்ளது' என திமுக-வை சாடினார்.

திமுக ஜனநாயகத்தை மதிக்காமல் செயல்பட்டு வருகிறது எனத் தெரிவித்த ஜெயக்குமார், ஆளும் கட்சியின் அமைச்சர்கள் இங்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் அவர் மகன் உதயநிதி ஸ்டாலின் இருவர் தவிர, 30 அமைச்சர்களும் ஈரோட்டில் தான் முகாமிட்டு உள்ளனர் எனக் கூறினார்.

'ஈரோடு கிழக்கில் அதிமுக வேட்பாளர் கே.எஸ். தென்னரசு மகத்தான வெற்றி பெறுவார். ஆனால் திமுகவின் கூட்டணி கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தோற்கத்தான் போகிறார்’ என்றார். தொடர்ந்து, நேற்று அறிமுக கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் கலந்து கொள்ளாதது குறித்த கேள்விக்கு, 'ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பயணம் என்பதால் அவர் சென்றார். ஆனால், பாஜக சார்பில் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்' என்றும்; தங்கள் கூட்டணியில் பிரச்னை இல்லை என்றும் பதிலளித்தார்.

'இரட்டை இலை சின்னத்தை போய் மவுசு குறைந்தது என்று சொல்வது சரி அல்ல. ஈனத்தனமான பிறவிகள் இன்னும் மாறவில்லை. டிடிவி தினகரன் நன்றி கெட்டவர். சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பி.எஸ் ஆகியோரை புரட்சித் தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆன்மா மன்னிக்காது' என்று கூறினார்.

'பொய் சொல்வதற்கு அளவு உள்ளது. தேர்தல் வாக்குறுதியை 85 சதவீதம் நிறைவேற்றியதாக முதலமைச்சர் சொல்கிறார். கல்விக் கடனை ரத்து செய்தீர்களா? , நீட் தேர்வு தமிழ்நாட்டில் ரத்து செய்தீர்களா?, டெல்டா மாவட்டங்களில் பயிர் நாசமானதைப் பார்க்காமல் உள்ளனர்’ என்று குற்றம்சாட்டினார். தொடர்ந்து, 'ஜனநாயக அமைப்பில் புகார் கொடுப்பது என்பது அடிப்படையான உரிமை. நாங்கள் சொல்வதை சொல்லிவிட்டோம். தேர்தல் கமிஷனுக்கு மேல் நீதிமன்றம் உள்ளது' என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க:இந்தியாவில் பிபிசிக்கு தடை கோரிய வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Last Updated : Feb 10, 2023, 8:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.