ETV Bharat / state

ஆயிரம் கோடிக்கு விளம்பரம் செய்த ஈபிஎஸ், ஓபிஎஸ்: ஆர்.எஸ். பாரதி!

சென்னை: தமிழ்நாடு கடனில் தவித்து வரும் நிலையில் ஈபிஎஸ், ஓபிஎஸ் அரசுப் பணத்தில் 1000 கோடி ரூபாய்க்கு விளம்பரம் செய்துள்ளனர் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி குற்றம்சாட்டியுள்ளார்.

author img

By

Published : Jan 22, 2021, 9:21 PM IST

EPS, OPS 1000 crore advertising R.s.Bharthy accused  R.s.Bharthy Press Meet  ADMK Banner Issue  அதிமுக பேனர் விவகாரம்  ஆர்.எஸ். பாரதி செய்தியாளர் சந்திப்பு  ஆர்.எஸ். பாரதி
R.s.Bharthy Press Meet

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் ஆகியோர் தலைமைச் செயலகத்திலுள்ள மாநிலத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகுவை சந்தித்து திமுக சார்பில் மனு கொடுத்தனர்.

பின்னர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், "அதிமுக அரசு கஜானாவிலிருந்து பணத்தைக் கட்சிக்கு விளம்பரம் செய்து வருகிறது. 2016ஆம் ஆண்டு தேர்தல் ஆணையம் வெளியிட்ட சுற்றறிக்கையில், கட்சியின் சின்னங்கள், கட்சியினை பிரபலப்படுத்த அரசுப் பணத்தை பயன்படுத்தக்கூடாது என்று தௌிவாகக் குறிப்பட்டுள்ளது.

ஆனால், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியைப் பிரபலப்படுத்த அரசு பணத்தைப் பயன்படுத்தி வருகிறது. ஏற்கெனவே நீதிமன்றம், தேர்தல் ஆணையம் பலமுறை எச்சரித்தும் அதனை அதிமுக மதிக்காமல் சர்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டு வருகிறது.

நீதிமன்றம் எச்சரிக்கை:

அதிமுக பேனர் விழுந்து பெண் மென்பொறியாளர் ஒருவர் உயிரிழந்த பிறகு, பேனர்களை வைக்கக்கூடாது என்று பலமுறை நீதிமன்றம் எச்சரித்தும்; கடந்த சில நாள்களாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் முதலமைச்சரின் சுற்றுப்பயணங்களில் அதிகளவு பேனர்கள் மக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ளன.

ஏற்கெனவே தமிழ்நாடு பல லட்சம் கோடி ரூபாய் கடனில் இருக்கிறது. இந்நிலையில், அதிமுக அரசு 1000 கோடி ரூபாய்க்கு விளம்பரம் செய்துள்ளது. அந்த விளம்பரத்திலும் ஊழல் நடைபெற்றுள்ளது. ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் மூலம் மட்டுமே விளம்பரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்துள்ளோம்.

திமுக தலைவரின் பயணங்கள், பரப்புரைகளில் திரண்டு வரும் மக்களைப் பார்த்தும், தலைவர் மு.க.ஸ்டாலினின் செல்வாக்கைப் பார்த்தும் மிரண்டு போய், அதிமுக கோடிக்கணக்கில் அரசின் பணத்தில் விளம்பரம் செய்து வருகின்றனர்.

செய்தியாளர்களிடம் பேசும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி

அரசுப் பணத்தில் விளம்பரம் ஏன்?

முதலமைச்சர் பழனிசாமி அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக உள்ள நிலையில், அவரை பிரபலப்படுத்த அரசின் பணத்தை செலவு செய்து வருகிறது. கட்சிப் பணத்தில் கோடிகளில் செலவு செய்யட்டும், அது குறித்து திமுக கவலைப்படவில்லை. ஆனால், இவர்கள் அரசின் நிதியிலிருந்து செலவு செய்து வருகின்றனர். விளம்பரங்களில் முதலமைச்சர் திமுக கரை வேட்டி கட்டிக்கொண்டு வருகிறார். திமுகவின் புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் அலுவலர் சாகு தெரிவித்துள்ளார். தேர்தல் அலுவலர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் திமுக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும்" என்றார்.

இதையும் படிங்க: திமுகவின் கிராம சபைக் கூட்டத்திற்குத் தடை: ஆர்.எஸ். பாரதி செய்தியாளர் சந்திப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.