ETV Bharat / state

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி: அனைத்து கட்சி கூட்டத்துக்கு முதலமைச்சர் அழைப்பு - அனைத்து கட்சி கூட்டத்துக்கு முதலமைச்சர் அழைப்பு

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வது தொடர்பாக முடிவு எடுக்க நாளை (ஏப். 26) அனைத்து கட்சி கூட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

eps-meet-regarding-oxygen-manufacture-at-sterlite

author img

By

Published : Apr 25, 2021, 8:02 PM IST

தமிழ்நாட்டில் கரோனா தொற்று இரண்டாவது அலை பரவி வரும் நிலையில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் ஆக்சிஜன் தெலங்கானா, ஆந்திரா மாநிலங்களுக்கு மத்திய அரசால் பகிர்ந்தளிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை ஸ்டெர்லைட் ஆலை நிறுவனம் நாடியுள்ளது. இதையடுத்து ஆலையை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்தவது தொடர்பாக முடிவெடுக்க நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இச்சூழ்நிலையில் நாளை காலை 9 மணியளவில் தலைமை செயலகத்தில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இதையும் படிங்க: முழு நேர ஊரடங்கு: தூத்துக்குடியில் 60 இடங்களில் போலீசார் வாகன தணிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.