ETV Bharat / state

விண்ணப்பிக்கும் அனைவருக்கும் 17ஆம் தேதி முதல் உடனுக்குடன் இ-பாஸ் - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு! - undefined

epass-for-all-applicants-from-17th-aug
epass-for-all-applicants-from-17th-aug
author img

By

Published : Aug 14, 2020, 2:35 PM IST

Updated : Aug 14, 2020, 3:16 PM IST

14:33 August 14

சென்னை: தமிழ்நாட்டில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் வரும் 17ஆம் தேதி முதல் உடனுக்குடன் இ-பாஸ் வழங்கப்படும் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு கரோனா வைரஸ் தொற்றிலிருந்து பொதுமக்களைப் பாதுகாத்து, அவர்களுக்குத் தேவையான நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தும், சிகிச்சைகளை அளித்தும், நிவாரணங்களைத் தொடர்ந்து வழங்கியும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. நோய்த் தொற்றின் போக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பொது மக்களின் ஒத்துழைப்பையும், நோய்த் தொற்றின் நிலையையும் கருத்தில் கொண்டு, ஊரடங்கில் படிப்படியாகத் தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்க, திருமணம், அவசர மருத்துவம், நெருங்கிய உறவினர் மரணம், பணி சம்பந்தமாக பயணித்தல், வெளியிடங்களுக்குச் சென்று சொந்த ஊர் திரும்புதல் ஆகிய காரணங்களுக்காக மட்டும் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க விண்ணப்பிக்கப்படும் இ-பாஸ்(E-Pass) விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாவட்டம் விட்டு, மாவட்டம் செல்பவர்கள் கண்காணிக்கப்பட்டு, நோய்த் தொற்று ஏற்பட்டால் அவர்களுடன் தொடர்புடையவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில், பொதுமக்கள் முக்கியப் பணிகளுக்குத் தடையின்றி, தமிழ்நாடு முழுவதும் பயணிக்க (மாவட்டங்களுக்கு இடையே) வரும் 17ஆம் தேதி முதல் ஆதார் அல்லது குடும்ப அட்டை விவரங்களுடன் தொலைபேசி அல்லது அலைபேசி எண்ணுடன் விண்ணப்பித்தால், இ-பாஸ் அனுமதி எவ்வித தாமதமும், தடையுமின்றி உடனுக்குடன் விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பொது மக்களின் நலன் கருதி எடுக்கப்பட்டுள்ள இம்முடிவை, அனைவரும் பொறுப்புடன் பயன்படுத்தி தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், தவிர்க்க இயலாத பணிகளுக்கு மட்டும்  இ-பாஸுக்கு விண்ணப்பம் செய்து, இ-பாஸ் பெற்று பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசின் நிலையான வழிகாட்டி நடைமுறைகளை கடைபிடிக்கவும், அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் பொது மக்களை  கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

Last Updated : Aug 14, 2020, 3:16 PM IST

For All Latest Updates

TAGGED:

Epass
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.