ETV Bharat / state

எந்திரன் கதை திருட்டு வழக்கு - இயக்குநர் சங்கர் ஆஜராக உத்தரவு!

சென்னை: எந்திரன் கதை திருட்டு வழக்கில் எழும்பூர் இரண்டவது நீதிமன்றத்தில் இயக்குநர் சங்கர், எழுத்தாளர் ஆரூர் தமிழ் நாடன் இருவரும் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

hc
author img

By

Published : Oct 19, 2019, 6:46 PM IST

1996ஆம் ஆண்டு 'இனிய உதயம்' பத்திரிகையில் ஆரூர் தமிழ்நாடன் எழுதிய 'ஜுகிபா' கதை வெளியானது. அதே கதை மீண்டும் தித்திக் தீபிகா என்ற நாவலிலும் 2007ஆம் ஆண்டு வெளியானது. இந்நிலையில் 2010ஆம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் திரைப்படம் வெளியான பின்புதான் தெரிந்தது ஜுகிபா கதை திருடப்பட்டு எந்திரன் திரைப்படத்தின் கதையாக அமைக்கப்பட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன், அப்படத்தின் தயாரிப்பாளர் கலாநிதிமாறன், இயக்குநர் ஷங்கர் ஆகியோருக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பினார். 1996இல்தான் தான் எழுதிய கதையைத் திருடி எந்திரன் படத்தை எடுத்துவிட்டு கோடிக்கணக்கில் சம்பாதிப்பதாகவும் இது காப்புரிமைச் சட்டத்தின்படி குற்றவியல் குற்றம். எனவே இந்த வழக்கில் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என புகார் கொடுத்திருந்தார்.

இந்த வழக்கை எழும்பூர் 13ஆவது நீதிமன்றத்தில் எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் தனிப்பட்ட முறையில் குற்றவியல் வழக்காக இயக்குநர் ஷங்கர் மீதும் தயாரிப்பாளரான கலாநிதிமாறன் மீதும் தொடுத்திருந்தார். இதையடுத்து வழக்கில் சம்பந்தப்பட்ட இருவரும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி 2011இல் அழைப்பாணை அனுப்பப்பட்டது. அந்த அழைப்பாணையை எதிர்த்து ஷங்கரும் கலாநிதிமாறனும் எழுத்தாளர் தமிழ்நாடன் தொடர்ந்த வழக்கு செல்லாது என உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து முறையிட்டனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி புகழேந்தி கலாநிதிமாறன் மீது எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் தொடுத்த வழக்கு செல்லாது எனவும், கதை ஒரே மாதிரி இருப்பதால் சங்கர் மீதான வழக்கை காப்புரிமை சட்டப்படி தொடர்ந்து நடத்த உத்தரவிட்டது.

இந்த வழக்கு பத்தாண்டாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்துவந்தது. எழும்பூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது புகார்தாரரான எழுத்தாளர் தமிழ்நாடன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

இந்த வழக்கை எழும்பூர் இரண்டாவது நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்ததோடு நவம்பர் 1ஆம் தேதியன்று இரண்டாவது நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று ஷங்கர், ஆரூர் தமிழ்நாடன் இருவருக்கும் எழும்பூர் பெருநகர் 13ஆவது நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:கொலை வழக்கிற்கு இதுதான் தண்டனையா? - உயர் நீதிமன்றம் அதிரடி கேள்வி

Intro:Body:எந்திரன் கதை திருட்டு வழக்கில் எழும்பூர் 2 வது நீதிமன்றத்தில் இயக்குநர் சங்கர் மற்றும் எழுத்தாளர் ஆரூர் தமிழ் நாடன் இருவருக்கும் நேரில் ஆஜராக உத்தரவுட்டுள்ளது.

1996 ஆம் ஆண்டு இனிய உதயம் பத்திரிகையில் ஆரூர் தமிழ்நாடன் எழுதிய ஜுகிபா கதை வெளியானது. அதே கதை மீண்டும் தித்திக் தீபிகா என்ற நாவலிலும் 2007 ஆம் ஆண்டு வெளியானது. இந்நிலையில் 2010 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் திரைப்படம் வெளியான பின்பு தான் தெரிந்தது ஜுகிபா கதை திருடப்பட்டு எந்திரன் திரைப்படத்தின் கதையாக அமைக்கப்பட்டிருந்தது.

அதைத்தொடர்ந்து எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன், தயாரிப்பாளர் கலாநிதி மாறன், டைரக்டர் சங்கர் ஆகியோருக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பினார்.

தான் எழுதிய கதையை திருடி எந்திரன் படத்தை எடுத்துவிட்டு கோடிக்கணக்கில் சம்பாதிப்பதாகவும், இது காப்புரிமை சட்டத்தின்படி கிரிமினல் குற்றம் எனவே இந்த வழக்கில் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என புகார் கொடுத்திருந்தார்.

மேலும், எழும்பூர் 13 வது நீதிமன்றத்தில் எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் தனிப்பட்ட முறையில் கிரிமினல் வழக்காக இயக்குனர் ஷங்கர் மீதும், தயாரிப்பாளரான கலாநிதி மாறன் மீதும் தொடுத்திருந்தார்

வழக்கில் சம்பந்தப்பட்ட இருவரும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி 2011ல் சம்மன் அனுப்பப்பட்டது. அந்த சம்மனை எதிர்த்து இயக்குனர் ஷங்கரும், கலாநிதிமாறனும் எழுத்தாளர் தமிழ்நாடன் தொடர்ந்த வழக்கு செல்லாது என உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம்,
கலாநிதிமாறன் மீது எழுத்தாளர் தமிழ்நாடன் தொடுத்த வழக்கு செல்லாது எனவும், கதை ஒரே மாதிரி இருப்பதால் சங்கர் மீதான வழக்கை காப்புரிமை சட்டப்படி தொடர்ந்து நடத்த உத்தரவிட்டது.

உயர்நீதிமன்ற உத்தரவின்படி எழும்பூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது புகார்தாரரான எழுத்தாளர் தமிழ்நாடன் நீதிமன்றத்தில் நேரில்ஆஜரானார். இந்த வழக்கை எழும்பூர் 2வது நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்ததோடு நவம்பர் 1 அன்று 2 வது நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று இயக்குநர் சங்கர் மற்றும் எழுத்தாளர் ஆரூர் தமிழ் நாடன் இருவருக்கும் எழும்பூர் பெருநகர் 13வது நீதிபதி உத்தரவிட்டார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.