ETV Bharat / state

ஆக்ஸிஜன் தடையில்லாமல் வழங்கப்படுவதை நாளைக்குள் உறுதிசெய்ய வேண்டும்: மத்திய அரசிற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

மத்திய அரசிற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
மத்திய அரசிற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
author img

By

Published : May 6, 2021, 3:54 PM IST

Updated : May 6, 2021, 8:54 PM IST

15:50 May 06

சென்னை: தமிழ்நாட்டிற்கு ஆக்ஸிஜன் தடையில்லாமல் வழங்கப்படுவதை நாளைக்குள் (மே.7) உறுதிசெய்ய வேண்டும் என்று மத்திய அரசிற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா பரவல் தீவிரமடைந்ததை அடுத்து ரெம்டெசிவிர் மருந்து, தடுப்பூசி பற்றாக்குறை, ஆக்ஸிஜன் பற்றாக்குறை, ஏற்றுமதி உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக ஊடகச் செய்திகளின் அடிப்படையில் தாமாகவே முன்வந்து சென்னை உயர் நீதிமன்றம் வழக்குத் தொடர்ந்தது. 

இந்த வழக்கு தலைமை நீதிபதிகள் சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (மே.6) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், செங்கல்பட்டு மருத்துவமனையில் நேற்று (மே.5) 13 பேர் மரணமடைந்ததற்கான காரணம் குறித்து கேட்டறிந்தனர். 

காணொலியில் ஆஜரான சுகாதார தலைமைச் செயலர் ராதாகிருஷ்ணன் மே 1, 2 ஆம் தேதிகளில் 220 டன் ஆக்ஸிஜன் தமிழ்நாடு வந்தது. மே 2ஆம் தேதி நடந்த கூட்டத்திற்குப் பிறகு மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய முடிவெடுத்த 475 டன் என்பதை முறையாக ஒதுக்கவில்லை என்று தெரிவித்தார். 

தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் 400 டன்னிலிருந்து 60 டன் ஆந்திரா, தெலுங்கானாவிற்கு அனுப்பப்படுவதாக தெரிவித்தார். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள மையத்தில் 150 டன் உற்பத்தி செய்வது சென்னை, செங்கல்பட்டிற்கு முக்கியப் பங்களிப்பாக உள்ளது என குறிப்பிட்டார். தினமும் ஆக்ஸிஜன் 475 டன் தேவைப்படும் என மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. 

செங்கல்பட்டில் மரணமடைந்த 13 பேரும் கரோனா தொற்று இல்லாத நோயாளிகள், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மரணம் ஏற்படவில்லை என விளக்கம் அளித்தார்.  தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் நிர்வாக இயக்குநர் உமாநாத் ஆஜராகி, கேரளாவில் இருந்து 40 டன் ஆக்ஸிஜன் தென் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட நிலையில் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் அதனை வழங்க வேண்டுமென வலியுறுத்தினார். 

கையிருப்பில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் நாளை (மே.7) வரை மட்டுமே இருக்கும், அதற்கு அடுத்த நாள் (மே.8) மிகவும் மோசமான சூழ்நிலையை எட்டிவிடுவோம் என அச்சம் தெரிவித்தார். படுக்கை விவரங்களை பொறுத்தவரை ஆக்ஸிஜன் வசதியுடைய படுக்கைகள் தவிர மற்ற படுக்கைகள் போதுமான அளவில் உள்ளதாக ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்தார். 

தடுப்பூசிகளை பொறுத்தவரை 18-45 வயதினருக்கான அளவை மாநில அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி 10.3 லட்சம் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான தொகை மே 5ஆம் தேதி முழுத்தொகையும் செலுத்தி உள்ளதாக உமாநாத் தெரிவித்தார். 

ரெம்டெசிவிர் மருந்தை பொறுத்தவரை 2.50 லட்சம் கேட்டதில் இதுவரை 1 லட்சத்து 35 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். அதன்படி 24 ஆயிரம் குப்பிகள் கீழ்ப்பாக்கம் மையத்தில் விற்கப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசின் ஒதுக்கீடு குறைவான அளவில் இருப்பதாகவும் உமாநாத் தெரிவித்தார். 

ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவித்த ராதாகிருஷ்ணன், சென்னையில் பரவும் கரோனாவை சமாளிக்க இன்று முதல் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 

மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கர நாராயணன் ஆஜராகி, ஸ்ரீபெரும்புதூரிலிருந்து 25 டன் தெலுங்கானாவிற்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். ஸ்டெர்லைட் உற்பத்தி நிலை ஒரு வாரத்தில் தெரியும் என விளக்கம் அளித்தார். ஆக்ஸிஜன் ஒதுக்குவதில் எவ்வித குறைபாடும் இல்லை என விளக்கம் அளித்தார். 

ரெம்டெசிவிர் உற்பத்தியை அதிகரிக்க மேலும் 7 நிறுவனங்களை இந்த வார இறுதியில் அனுமதிக்க இருப்பதாகவும், காப்புரிமை தொடர்பான விவகாரத்தைக் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார். 

செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனம் செயல்பாட்டுக்கு கொண்டுவருவது தொடர்பாக அடுத்தவாரம் விளக்கம் அளிப்பதாக தெரிவித்தார். ஆக்ஸிஜன் ஒதுக்கீடு உத்தரவிற்காக காத்திருக்காமல் ஆக்ஸிஜனை அனுப்ப நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 

அப்போது நீதிபதிகள் ஓரிரு நாளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்படும் என அச்சம் உள்ளதால் முறையாக ஒதுக்கீடு செய்வதை உறுதிபடுத்த அறிவிறுத்தியுள்ளனர். வட மாநிலங்களில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (Defense Research and Development Organisation) ஆக்ஸிஜன் உற்பத்திக்கு விரைந்து செயல்படுவதுபோல தென் மாநிலங்களுக்கும் செய்ய மத்திய அரசு அதிகாரத்திற்குட்பட்டு செய்ய நீதிபதிகள் அறிவுறுத்தினர். 

புதுச்சேரி அரசு வக்கீல் மாலா ஆஜராகி, 2,997 படுக்கைகள் உள்ளதாகவும், ஆக்ஸிஜன் போதுமான அளவில் உள்ளதாகவும் ரெம்டெசிவிர் மருந்து 4,150 குப்பிகள் வந்ததாகவும், 2,106 இருப்பு உள்ளதாகவும் தெரிவித்தார். ஆளுநர் மருத்துவர் என்பதால் மருத்துவமனைகளுக்கு நேரடியாகச் சென்று கள ஆய்வு செய்து வருகிறார் என்றும் தெரிவித்தார். 

புதுச்சேரியில் உண்மை நிலைமை வெளிப்படுத்தவில்லை என வழக்கறிஞர் ஞானசேகர் ஆஜராகி குற்றம்சாட்டினார். அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை என புதுச்சேரி அரசு இணையதளத்தில் இருப்பதாகவும், தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே காலியாக இருப்பதாகவும் வழக்கறிஞர் ஸ்ரீதர் என்பவர் குற்றம்சாட்டினார். அப்போது நீதிபதிகள் புதுச்சேரியையும் கண்காணித்து வருவதாகவும், மனுதாரர் வைத்துள்ள விவரங்களை நீதிமன்றத்திடமும், அரசிடமும் கொடுக்க அறிவுறுத்தினர். 

பாலாஜி ராம் தரப்பில் 50 ஆயிரம் ஆக்ஸிஜன் மருத்துவமனைகள், ஐஐடி நிபுணர்கள் மூலம் கவுன்சிலிங் வழங்க வேண்டும், கரோனா சிகிச்சைக்குப் பெயரளவிற்கு மட்டுமே வசூலிக்க வேண்டும், ரெம்டெசிவிர் மருத்து அஞ்சல் மூலம் வழங்க வேண்டும், 15 நாட்கள் முழு ஊரடங்கு ஏற்படுத்த வேண்டும், மருத்துவமனை கண்காணிப்பு குழுக்களை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 

பி.ஏ.ஜோசப் தரப்பில் மாற்றுமுறை மருத்துவ முறைக்கு முக்கியத்துவம் அளிப்பது குறித்து கவனத்திற்கு கொண்டுவரப்பட்டபோது, இதில் தாங்கள் நிபுணர் இல்லை என்று அரசு பரிசீலித்து முடிவெடுக்கும் என நீதிபதிகள் தெரிவித்தனர். மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி ரெம்டெசிவிர், ஆக்ஸிஜன் ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசிற்கு முறையான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டுமென தெரிவித்தார். 

பின்னர் உத்தரவு பிறப்பித்த தலைமை நீதிபதி அமர்வு, தமிழ்நாட்டிற்குத் தேவையான ஆக்ஸிஜன் ஒதுக்கீடு செய்வதற்கு நாளைக்குள் (மே 7) மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டுமெனவும், வாழ்வதற்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காமல் வாழ்வு பறிபோய்விடக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளனர். 

ஆக்ஸிஜன் உள்ளிட்ட மருத்துவ உதவிகளை வழங்குவதில் சமமான பங்கீடு இருக்க வேண்டுமென மத்திய அரசிற்கு உத்தரவிட்டுள்ளனர். மாவட்ட மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் இல்லாததால் மரணங்கள் ஏற்படுவதைத் தடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கவும் அரசிற்கு உத்தரவிட்டனர். 

மதுரை, கோவை போன்ற நகரங்களில் டி.ஆர்.டி.ஓ மூலம் போர்க்கால அடிப்படையில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையத்தை அமைப்பது குறித்து மத்திய அரசு ஆலோசிக்கவும் அறிவுறித்தி உள்ளனர். மூன்றாவது அலை உருவாகும் அச்சம் எழுந்துள்ள நிலையில் தடுப்பூசி விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசிற்கு உத்தரவிட்டனர். 

புதுச்சேரியை பொறுத்தவரை ஆக்ஸிஜன், படுக்கை ஆகியவை போதுமானதாக இருந்தாலும், எதிர்காலத்தை கருத்தில்கொண்டு கவனமாக செயல்பட வேண்டுமெனவும் அறிவுறுத்தினர். படுக்கை விவரங்களை குழப்பம் இல்லாமல் வெளியிட அறிவுறுத்தினர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுகள் பல கடுமையான உத்தரவுகளை இன்று முதல் அடுத்த இரண்டு வாரங்களுக்கு அமல்படுத்துவது கரோனாவின் பரவலை குறைக்கும் என நீதிபதிகள் நம்பிக்கை தெரிவித்தனர். பின்னர் இந்த வழக்கு மே 12ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. 

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் பிராணவாயு இருப்பு என்ன? நீதிமன்றம் கேள்வி

Last Updated : May 6, 2021, 8:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.