ETV Bharat / state

இங்கிலாந்து அணி வீரர்கள் சென்னை வருகை! - England cricket team players

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி வீரர்கள் விமானம் மூலம் இன்று சென்னை வந்தடைந்தனர்.

england
england
author img

By

Published : Jan 24, 2021, 7:04 PM IST

Updated : Jan 24, 2021, 11:01 PM IST

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், டி20, ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்காக இங்கிலாந்து அணியினர் இன்று (ஜனவரி 21) விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.

ஜோப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்ட 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணியினர் சென்னை வருகை தந்துள்ளனர். 4 டெஸ்ட் போட்டிகள், 5 டி20 போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள் என இங்கிலாந்து அணியினர் இந்திய அணிக்கு எதிரான தொடரில் விளையாட உள்ளனர்.

பிப்ரவரி 5 மற்றும் 13ஆம் தேதி நடைபெறும் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. மீதமுள்ள இரண்டு டெஸ்ட், 5 டி20 போட்டிகள் அகமதாபாத்திலும், 3 ஒருநாள் போட்டிகள் புனேவிலும் நடைபெற உள்ளது. சென்னை வருகை தந்துள்ள இங்கிலாந்து வீரர்கள் மந்தைவெளியில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை வந்தடைந்த இங்கிலாந்து அணி வீரர்கள்

இலங்கை அணியுடனான தொடரில் விளையாடிக் கொண்டிருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களின் ஒரு பகுதியினர், அங்கு டெஸ்ட் தொடரை முடித்துவிட்டு சென்னை திரும்புவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:'கடின உழைப்பு இருந்தால் நிச்சயம் சாதிக்கலாம்; அதற்கு நானே பெரிய உதாரணம்' - 'யார்க்கர் கிங்' நடராஜன்

Last Updated : Jan 24, 2021, 11:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.