ETV Bharat / state

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 16ஆம் தேதி தொடக்கம்! - Engineering Student Admission starts on 16th August

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 16ஆம் தேதி தொடங்குகிறது எனவும்; கடந்த ஆண்டு வசூலிக்கப்பட்ட கட்டணமே வசூலிக்கப்படும் எனவும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பொன்முடி

author img

By

Published : Jun 8, 2022, 4:41 PM IST

சென்னை தலைமைச்செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வருகிற 23ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு மற்றும் விண்ணப்பிக்க கூடிய நடைமுறைகள் குறித்து அரசு மற்றும் தனியார் கல்லூரி பிரதிநிதிகள் மாணவர் சங்கத்தின் பிரதிநிதிகள் இன்று (ஜூன் 08) கலந்தாலோசிக்கப்பட்டது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் காலியாக இருப்பதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள், நடைபெறவுள்ள கலந்தாய்வில் மேற்கொள்ளப்படவுள்ளது. பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தை வருகிற 20ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் ஜூலை 19 வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்” என தெரிவித்தார்.

விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும் எனவும்; இதற்காக மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மற்றும் 110 பாலிடெக்னிக் கல்லூரிகளில் விண்ணப்பிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

20.7.2022 முதல் - 31.7.2022 வரை சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் நடைபெறும் எனவும்; அதனைத்தொடர்ந்து 8.8.2022அன்று தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும் எனத்தெரிவித்தார்.

16.8.2022 - பொறியியல் கலந்தாய்வு தொடங்கி 19ஆம் தேதி வரை என 4 நாள்கள் மாற்றுத்திறனாளிகள்
விளையாட்டுப் பிரிவு, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு கலந்தாய்வு நடைபெற இருப்பதாகத் தெரிவித்தார். தொடர்ந்து பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு 22.08.2022 முதல் 14.10.2022 வரை பொறியியல் கலந்தாய்வு நடைபெறும் என்றார்.

பொறியியல் மாணவர்களுக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட அதே கட்டணம் வசூலிக்கப்படும் எனவும்;
கலந்தாய்வின் மூலம் கல்லூரிகளில் இடங்களைத்தேர்வு செய்யக்கூடிய மாணவர்கள் ஒரு வார காலத்திற்குள் கல்லூரிக் கல்வி கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

முதல் கட்ட கலந்தாய்வு 15 ஆயிரம் பேர், இரண்டாம் கட்ட கலந்தாய்வில் 15 ஆயிரம் மாணவர்கள் என மொத்தம் நான்கு கட்டங்களாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படும் எனத் தெரிவித்தார். தொடர்ந்து அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு மாணவர்கள் இணையதளம் மூலம் வருகிற 27ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனக்கூறினார்.

செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பொன்முடி

மேலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 25-07-2022ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றார்.

இதையும் படிங்க: அரசின் புதிய அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு.. அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.