சென்னை: தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 25ஆம் தேதி தொடங்க இருந்த பொதுப்பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு, நீட் தேர்வினால் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், பொதுப்பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு இன்று (செப் 10) தொடங்கியுள்ளது.
இவை நவம்பர் 13ஆம் தேதி வரை நான்கு கட்டங்களாக நடைபெறும் என்று கூறப்படுகிறது. கட் - ஆப் 184 முதல் 200 வரை உள்ள 14,524 பேர் முதல் சுற்று கலந்தாய்வில் பங்கேற்றுள்ளனர். அதோடு 332 அரசுப்பள்ளி மாணவர்கள் 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் முதல் சுற்று கலந்தாய்வில் பங்கேற்றுள்ளனர்.
கலந்தாய்வில் இடங்கள் ஒதுக்கப்பட்ட பின், வரும் 22ஆம் தேதிக்குள் மாணவர்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட கல்லூரிகளில் சேர வேண்டும். 22-ம் தேதிக்குள் கல்லூரிகளில் சேராவிட்டால் அந்த இடங்கள் காலியாக அறிவிக்கப்பட்டு, மீண்டும் கலந்தாய்வு நடத்தப்படும். மேலும் இது குறித்து http://www.tneaonline.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.