ETV Bharat / state

Enforcement Directorate: அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தது ஏன்? அமலாக்கத்துறை விளக்கம்! - dmk

அமைச்சர் செந்தில் பாலாஜி மோசடி வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில், செந்தில் பாலாஜி அதிகாரத்தை பயன்படுத்தி விசாரணைக்கு ஒத்துழைக்காமல் மிரட்டியதாக அமலாக்கத்துறையினர் கூறியுள்ளனர்.

அமைச்சர் செந்தில்பாலாஜியை கைது செய்தது ஏன் என அமலாக்கத்துறை விளக்கம்

author img

By

Published : Jun 14, 2023, 10:36 PM IST

Updated : Jun 14, 2023, 11:01 PM IST

சென்னை: மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மோசடி வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதயத்தில் அடைப்பு இருந்ததால் அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டு, இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது. இதனை அடுத்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி அல்லி மருத்துவமனைக்கு நேரில் வந்து செந்தில் பாலாஜியிடம் விசாரணை மேற்கொண்டு வருகிற 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இதற்கிடையே அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணை காவலில் எடுக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில் செந்தில் பாலாஜி கைது செய்தது ஏன் என சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு போக்குவரத்து துறையில் வேலை வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி செந்தில் பாலாஜி மோசடியில் ஈடுபட்டதாகவும், குறிப்பாக தனது உதவியாளர்கள் சண்முகம், கார்த்திகேயன், செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் மூலமாக செந்தில் பாலாஜி பணத்தைப் பெற்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி வங்கி கணக்கில் 1.34 கோடி மற்றும் அவரது மனைவி மேகலாவின் வங்கி கணக்கில் 29.55 லட்சம் ரூபாயும் டெபாசிட் செய்யப்பட்டு உள்ளதாகவும் வருமான வரித்துறையில் செந்தில் பாலாஜி கணக்கு காண்பித்ததை ஒப்பிடும்போது பல மடங்கு டெபாசிட் செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந்திருப்பதாக கடந்த 2022 ஆம் ஆண்டு பலமுறை செந்தில் பாலாஜி, கார்த்திகேயன், சகோதரர் அசோக் ஆகியோருக்கு விசாரணைக்கு ஆஜராக பல முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து விதிமுறைகளை மீறி நியமனங்களை செய்ததற்கு தனது நேர்முக உதவியாளர் மூலமாக செந்தில் பாலாஜி பணத்தை வசூலித்தார் என அமலாக்கத்துறை குற்றச்சாட்டி உள்ளது.

சட்டவிரோத பணம் பரிமாற்றம் தொடர்பாக செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் கடந்த 13ஆம் தேதி அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாகவும், சோதனையின் போது கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையில் விசாரணைக்கு ஆஜராக செந்தில் பாலாஜியிடம் சம்மன் சான்றிதழில் கையெழுத்திடுமாறு அமலாக்கத் துறையினர் கேட்டதற்கு அதிகாரிகளை மிரட்டும் தொனியில் செந்தில் பாலாஜி சத்தம் போட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரு சாட்சிகள் முன்னிலையில் அவரது வாக்குமூலத்தை பதிவு செய்ய அமலாக்க துறையினர் முயற்சித்த போது விசாரணைக்கு ஒத்துழைக்காமல் எந்த பதிலையும் தெரிவிக்காமல் இருந்ததாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளனர். முழு விசாரணைக்கு ஒத்துழைக்காமல் செந்தில் பாலாஜி தனது பதவியை பயன்படுத்தி வழக்கு தொடர்பான ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட வாய்ப்பிருப்பதாக கூறி அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜி கைது செய்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதால் செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவல் எடுத்து விசாரணை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை நாளை நீதிமன்றத்தில் வருகிறது.

இதையும் படிங்க: Senthil Balaji: செந்தில் பாலாஜி கைதை எதிர்பார்த்து காத்திருந்த கோவை திமுகவினர்.. காரணம் என்ன?

Last Updated : Jun 14, 2023, 11:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.