ETV Bharat / state

‘அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்ட விரோதமாக சிறை பிடிக்கவில்லை' - அமலாக்கத்துறை விளக்கம்! - Enforcement Department explained in M H Court

அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்யும் முன் சட்ட விரோதமாக சிறை பிடிக்கவில்லை என அமலாக்கத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

செந்தில் பாலாஜி கைது குறித்து அமலாக்கத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம்

author img

By

Published : Jun 25, 2023, 10:55 PM IST

சென்னை: அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோதக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரை விடுவிக்கக் கோரியும் அவரது மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் அமலாக்கத்துறை பிரிவு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், செந்தில் பாலாஜியை ஜூன் 14ஆம் தேதி அதிகாலை 1.39 மணிக்கு கைது செய்யப்படும் முன், சட்ட விரோதக் காவலில் வைக்கவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 13ஆம் தேதி நடந்த சோதனையின்போது அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் தான் இருந்தார் என்றும் அவரை சட்ட விரோதமாக சிறை பிடித்ததாக கூறுவது தவறு என்று அமலாக்கத்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும், செந்தில் பாலாஜியை விசாரணைக்கு ஆஜராக கூறி ஜூன் 13ஆம் தேதி சம்மன் அளித்தபோது அதை அவர் பெற மறுத்ததாகவும், அதிகாரிகளை மிரட்டும் தொணியில் நடந்து கொண்டதாகவும், விசாரணைக்கு ஒத்துழைக்காததால் வேறு வழியின்றி கடைசி நடவடிக்கையாக கைது செய்ததாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

சாட்சிகளை கலைத்து, ஆதாரங்களை அழிக்க வாய்ப்பு இருந்ததால் தான் அவர் உடனடியாக கைது செய்யப்பட்டதாகவும், இதுவரை திரட்டப்பட்ட ஆதாரங்கள் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற குற்றம் புரிந்துள்ளார் என நம்ப போதுமானதாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜியின் வங்கி கணக்கில் பெருந்தொகை டெபாசிட் செய்யப்பட்டதற்கு அவர் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை எனவும், கைது செய்யப்பட்ட போது அதற்கான காரணங்கள் தெரிவிக்கப்பட்டதாகவும், அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் அமலாக்கப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைதின் போது அனைத்து நடைமுறைகளும் சரிவர பின்பற்றப்பட்டது என்றும் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் இதுவரை அமலாக்கத் துறை அவரை காவலில் எடுத்து விசாரிக்கவில்லை எனவும், எதிர்காலத்தில் காவலில் வைத்து விசாரிக்க வாய்ப்பளிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது. வரும் ஜூன் 27 ஆம் தேதி மேகலா தொடர்ந்த ஆட்கொனர்வு மனு விசாரணைக்கு வரும்போது இந்த மனுவும் விசாரிக்கப்பட உள்ளது.

செந்தில் பாலாஜி மனைவி மேகலாவின் கூடுதல் மனு: தனது கணவருக்கு எதிராக மத்திய அரசு அமைப்புகள் நடவடிக்கை எடுக்கும் என 2022ஆம் ஆண்டு முதல், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை பேசி வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கில் மேகலா தரப்பில் கூடுதல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், அரசியலுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பார் என்ற அடிப்படையில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தனது கணவருக்கு எதிராக வெறுப்பை வளர்த்துக் கொண்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் தன் கணவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என 2022 ஆகஸ்ட் முதல் அண்ணாமலை பேசி வருவதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். கைது செய்து மருத்துவமனையிலேயே ரிமாண்ட் செய்தபோது, அதை ஆட்சேபித்த தங்களது மனுவை நீதிமன்றத்தில் விசாரிப்பதாக கூறிய முதன்மை நீதிமன்ற நீதிபதி, நீதிமன்றம் வந்தபின்னர், அந்த மனுவை விசாரிக்க தேவையில்லை எனக் கூறிவிட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.

அமலாக்கத்துறை பஞ்சநமாவில் ஜூன் 13ஆம் தேதி இரவு 11 மணிக்கு சோதனை நிறைவடைந்ததாக குறிப்பிட்டுள்ள நிலையில், நள்ளிரவு 1.39 மணிக்குத்தான் கைது செய்யப்பட்டதாக குறிப்பிட்டு இருக்கிறார்கள் என்றும், இடைப்பட்ட மூன்று மணி நேரத்தில் என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியவில்லை எனவும் மேகலா தெரிவித்துள்ளார்.

எனவே சட்டவிரோத கைது உத்தரவில் இருந்து தனது கணவர் செந்தில்பாலாஜியை விடுவிக்க வேண்டுமென மேகலா கோரிக்கை வைத்துள்ளார். அந்த மனுவை முறையாக பரிசீலிக்காமல் அவரை நீதிமன்ற காவலில் வைத்து பிறப்பித்த உத்தரவு சட்ட விரோதமானது என்றும் அவரை விடுவிக்க வேண்டும் எனவும் கூடுதல் மனுவில் மேகலா சுட்டிக்காட்டி உள்ளார். இந்த கூடுதல் மனுவும் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

இதையும் படிங்க: தேனியில் முதன்முறையாக நடைபெற்ற வீட்டுத்தோட்டச் செடிகள் கண்காட்சி - ஏராளமானோர் வருகை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.