சென்னை: மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருப்பதாவது, "எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் முதன் முறையாக தமிழகத்தில் சூரிய சத்தி மூலம் மின்சாரம் தயாரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக 400 மெகாவாட் சூரிய சக்தி மின்சாரம் உற்பத்தி தொடங்கப்பட உள்ளது. இதற்காக தமிழ்நாடு மின்சார வாரியம் 3 ஆயிரத்து 263 ஏக்கர் நிலம் வாங்கியிருப்பதாகவும், காற்றாலை மின்சாரம் தயாரிப்பதில் முதல் மாநிலமாக தமிழ்நாடு தற்போது வரை சிறப்பாக இருந்து வருவதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
சூரியசக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பதில் இந்திய அளவில் தமிழ்நாடு நான்காவது இடத்தில் இருந்து வருவதாக கூறினார். ஜனவரி முதல் கரூர், செங்கல்பட்டு, சேலம், உள்ளிட்ட மாவட்டங்களில் சூரிய சக்தி மூலம் ஆயிரம் மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் திட்டம் தொடங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். இத்திட்டத்தின் மூலம் நாட்டில் தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்கும் என செந்தில் பாலாஜி கூறினார்.
இதையும் படிங்க : ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ராஜினாமா... ட்விட்டர் அலுவலகங்கள் மூடல்...!