ETV Bharat / state

கேங்மேன் பணிக்கு எதிராக நீதிமன்றம் சென்றது ஏன்? - ராஜேந்திரன் விளக்கம் - மின்சார வாரியம்

சென்னை: கேங்மேன் பணியிடத்திற்கு வரையறுக்கப்பட்ட விதிகளின்படி, அப்பணியில் சேரும் பொறியியல் பட்டதாரி மேற்கொண்டு எவ்வித பதவி உயர்வுக்கும் செல்ல முடியாது என்பதால் நீதிமன்றதை நாடினோம் என தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் ராஜேந்திரன் விளக்கமளித்துள்ளார்.

கேங்மேன் பணிக்கு எதிராக நீதிமன்றம் சென்றது ஏன்?

author img

By

Published : Dec 21, 2020, 10:03 PM IST

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள வயர்மேன் மற்றும் ஹெல்பர் பணியிடங்களை தனியார் மூலம் நிரப்ப உத்தரவிட்டுள்ள மின்சாரத் துறை, அதற்கான நிதியையும் ஒதுக்கீடு செய்துள்ளது.

உத்தரவை ரத்து செய்த மின்சார வாரியம்

அவுட்சோர்சிங் முறையில் தனியார் நிறுவனத்தின் மூலம் பணியாளர்கள் நியமனம் செய்யவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் இன்று (டிச.21) மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மின்சார வாரியம் இந்த உத்தரவை ரத்து செய்து அறிவித்தது.

அதே போல் துணை மின் நிலையங்களை தனியார் நிறுவனங்களை கொண்டு பராமரிப்பதையும் ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதனையும் ஏற்று 5 துணை மின் நிலையங்களை தனியார் நிறுவனங்கள் பராமரிப்பதற்கு அளிக்கப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

இதன் பின்னர் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் கூடியிருந்த தொழிலாளர்கள் மத்தியில் தங்களுக்கு கிடைத்த வெற்றியைப் பகிர்ந்து கொண்டனர்.

மின் ஊழியர்களின் போராட்டம்

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச்செயலாளர் ராஜேந்திரன் ஈடிவி பாரத்திடம் பேசியபோது, ”தனியாருக்கு தாரை வார்க்கப்பட்ட 5 துணை மின் நிலையங்களைத் திரும்ப பெறுவதோடு, மின்சார வாரியத்தின் அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை தனியார் நிறுவனத்தின் மூலம் நிரப்பப்படுவதை ரத்து செய்ய வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டோம்.

எங்கள் போராட்டத்தை அடுத்து தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்திற்கு வந்த மின்சாரத்துறை அமைச்சர் எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். அப்போது நாங்கள் பேச்சுவார்த்தைக்கு செல்லவில்லை. ஒருவேளை பேச்சுவார்த்தைக்கு சென்றிருந்தால் எங்களை சமாதானம் செய்துவிட்டு சென்றிருப்பார். எங்களின் கோரிக்கைக்காக மட்டுமே நாங்கள் அமைச்சருடன் பேச்சுவார்த்தைக்கு செல்லவில்லை.

இப்போது தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள வயர்மேன் மற்றும் ஹெல்பர் பணியிடங்களை தனியார் மூலம் நியமிக்கப்படும் என்ற உத்தரவை தமிழ்நாடு மின்சார வாரியம் ரத்து செய்து அறிவித்துள்ளது. இது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது”என்றார்.

கேங்மேன் பணியிடங்கள்

மின்சார வாரியத்தில் கேங்மேன் பணியிடங்கள் நிரப்பப்பட்டபோது அதனை எதிர்த்து தொழிற்சங்கங்கள் நீதிமன்றத்திற்கு சென்றன. கேங்மேன் பணியிடங்களுக்கான உத்தரவில் ஒருவர் பணியில் சேர்ந்தால் மூன்று பதவிகளை மட்டுமே பெற முடியும். ஒரு பொறியியல் பட்டதாரி இந்தப் பணியில் சேர்ந்தால் அவர் கேங்மேனாக மட்டுமே ஓய்வு பெற முடியும். மின்சார வாரியத்தின் ஒப்பந்தத்தின்படி ஊழியர்களிடம் எவ்வித ஆலோசனையும் செய்யப்படவில்லை எனத் தெரிவித்த ராஜேந்திரன், இதற்காகத் தான் நீதிமன்றத்தை நாடியதாகவும் கூறினார்.

கேங்மேன் பணிக்கு எதிராக நீதிமன்றம் சென்றது ஏன்?

கேங்மேன் பணியிடங்களை நிரப்புவதில் உள்ள பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளோம்" என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மின்வாரியத்தில் ஹெல்பர், வயர்மேன் பணியிடங்கள் தனியாரிடம் ஒப்படைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.