ETV Bharat / state

எரிந்த புதைவட மின்சார கேபிள் - அச்சத்தில் மக்கள்

மயிலாப்பூரில் சாலையில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில் மின்சார கேபிளில் இருந்து புகைவந்த காரணத்தால் பதற்றமான சூழல் உருவானது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 13, 2022, 5:01 PM IST

சென்னை மயிலாப்பூர் ஆலிவர் சாலையில் மின்சார புதைவட கேபிள் பழுதடைந்து, எரிந்த காரணத்தால் புகை வந்தபடியே இருந்துள்ளது. சாலையில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில் மின்சாரகேபிளில் இருந்து புகைவந்த காரணத்தால் பெரும் விபத்து ஏற்பட இருந்தது.

இந்நிலையில் அப்பகுதி மக்கள் மின்வாரியத்திற்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் மயிலாப்பூர் மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக மின் இணைப்பைத் துண்டித்து சம்பவ இடத்திற்கு வந்து, கேபிளை அப்புறப்படுத்தி பழுதுபார்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று இதே இடத்தில் பழுது பார்த்து புதைவட கேபிளை மாற்றிய நிலையில் மழைநீர் தேங்கி இருப்பதால், மீண்டும் இன்று அந்த கேபிள் எரிந்துள்ளதாக மின்வாரிய ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். உடனடியாக அப்பகுதியில் நிற்கும் மழைநீரை அப்புறப்படுத்தவேண்டும் என்றும்; இல்லை என்றால் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.

எரிந்த புதைவட மின்சார கேபிள்

இதையும் படிங்க: வான் சாகசத்தில் விபரீதம் - விண்ணில் வெடித்து சிதறிய போர் விமானங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.