ETV Bharat / state

மே 2ஆம் தேதி திட்டமிட்டபடி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்:சத்யபிரதா சாகு தகவல்! - தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு தகவல்

தமிழ்நாட்டில் திட்டமிட்டபடி மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

சத்யபிரதா சாகு
சத்யபிரதா சாகு
author img

By

Published : Apr 21, 2021, 3:20 PM IST

சென்னை: கரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், திட்டமிட்டபடி மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும், வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்றுவது தொடர்பாக எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை என்று தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, “நாடு முழுவதும் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மாநிலங்களிலுள்ள கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு எவ்வாறு வாக்கு எண்ணிக்கையை நடத்துவது என்பது குறித்து இந்திய தேர்தல் ஆணையத்துடன் நடைபெற்ற காணொளி காட்சி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் பல இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் அறைகள் பெரிய இட வசதியுடன் உள்ளது. எனவே மேசைகளை குறைக்கும் வாய்ப்புகள் குறைவு தான்.

மேசைகள் குறைத்தால் சுற்றுகள் எண்ணிக்கை அதிகரித்து முடிவுகள் வெளி வர பல மணி நேரங்கள் ஆகும். நீண்ட நேரம் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் கட்சி பிரதிநிதிகளுக்கு ஏற்படும் சிரமம் உள்ளிட்ட, பல நடைமுறை சிக்கல்கள் உள்ளது. இதுபோன்ற அனைத்து அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

வாக்கு எண்ணிக்கை சுற்றுகள் அதிகரிப்பது வாக்கு எண்ணிக்கையின் கலந்துகொள்ளும் கட்சி முகவர்களுக்குக் கரோனா சோதனை எடுப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இன்று (ஏப்.21) மாலை மாவட்ட தேர்தல் அலுவலர்கள், சுகாதாரத் துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடைபெறவுள்ளது. அனைத்து கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: வாக்கு எண்ணும் மையத்தின் மேலே பறந்த ட்ரோன்: நாகையில் பரபரப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.