சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாஹு செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர், விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் ஒன்பது மணி நேர நிலவரப்படி விக்கிரவாண்டியில் 12.84% வாக்குகளும், நாங்குநேரில் 18.41% வாக்குபதிவுகளும் பதிவாகியுள்ளது.
ஒருசில இடங்களில் மழை காரணமாக இணையதள சேவை பாதிப்பு ஏற்பட்டு தகவல்கள் தாமதமாக வந்துள்ளது. தேர்தல் எந்தவித பிரச்னைகளும் இல்லாமல் மிகவும் அமைதியாக நடந்துவருகிறது.
விக்கிரவாண்டியில் 275 சிசிடிவி கேமராக்களும், நாங்குநேரியில் 295 சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டு, வாக்குப்பதிவு கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் ஆணைய விதிகளின் படி ஆறு மணிக்குள் வாக்குபதிவு நிறைவடையும். வரிசையில் நிற்பவர்களுக்கு மட்டும் வாக்குகளை பதிவு செய்வதற்கு அனுமதிச்சீட்டு கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க:
கொடுத்த பணத்தைக் கேட்டது குற்றமா? மாணவனை தாக்கிய திமுக வட்டச் செயலாளர்!