சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்துடன் லண்டனில் வசித்துவருகின்றார். இவரது 17 வயது மகள் லண்டனில் படித்துவருகின்றார். இவர் கடந்த சில ஆண்டுகளாகவே மன அழுத்தத்தில் இருந்துவந்ததாகவும், தனது வழக்கமான நடவடிக்கையில் இருந்து மாறுபட்டு காணப்பட்டதால், சிறுமியின் பெற்றோர் அவர் பயிலும் பள்ளியில் கவுன்சிலிங்கிற்கு ஏற்பாடு செய்தனர்.
கவுன்சிலிங்கில் சிறுமி பல்வேறு தகவல்களை ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார். அதில், 2014ஆம் ஆண்டு சிறுமி விடுமுறைக்காக சென்னை அண்ணா நகரில் உள்ள தனது தாத்தா வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தாத்தா முறை கொண்ட நபர் மோகன்கிஷின்சந்த் தலானி (68) என்பவர் சிறுமியை தனியாக அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
இதனால் சிறுமி மன அழுத்தத்திற்கு உள்ளானதும் தெரியவந்தது. இதனைக் கேட்டு அதிர்ந்த சிறுமியின் பெற்றோர் நடந்த சம்பவம் குறித்து லண்டன் காவல் துறையினரிடம் புகாரளித்துள்ளனர். அவர்கள் குற்றம் இந்தியாவில் நடந்துள்ளதால் அந்நாட்டில் புகாரளிக்கும்படி தெரிவித்தனர்.
இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் நடைபெற்ற சம்பவம் குறித்து ஆன்லைன் மூலமாக கடந்த 11ஆம் தேதி திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் விசாரணை நடத்திய காவல் துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து மோகன் சந்த்கிஷான்சன் தலானியை கைதுசெய்தனர்.
இதையும் படிங்க: சமூகமே நோய்வாய் பட்டிருப்பதை காட்டும், குழந்தைகள் மீதான பாலியல் வக்கிரங்கள்!