ETV Bharat / state

இஐஏ 2020 வரைவின் தமிழ் மொழியாக்கம் தயாராக உள்ளது - மத்திய அரசு தகவல்!

author img

By

Published : Aug 13, 2020, 2:32 PM IST

சென்னை : சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையின் தமிழ் மொழியாக்கம் தயாராக உள்ளதாக மத்திய அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஐஏ 2020 வரைவின் தமிழ் மொழியாக்கம் தயாராகவுள்ளதென மத்திய அரசு தகவல்!

ஆங்கிலம், இந்தியில் வெளியிடப்பட்டுள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை பிராந்திய மொழிகளில் வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரியும், அதுவரை வரைவு அறிக்கைக்கு தடை விதிக்கக் கோரியும் மீனவர் அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை தமிழில் வெளியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா? உள்ளாட்சி அமைப்புகளின் இணையதளங்களில் வெளியிட முடியுமா? என்பது குறித்து விளக்கமளிக்க மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 13) மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞர், "சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பு தயாராக உள்ளது. இதுசம்பந்தமாக எழுத்துப்பூர்வமான விளக்கத்தை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும்.

மேலும், இந்த வரைவு அறிக்கை தொடர்பாக பல்வேறு உயர் நீதிமன்றங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது" என குறிப்பிட்டார்.

மத்திய அரசின் வாதத்தை ஏற்ற நீதிபதிகள், "இது தொடர்பாக மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும். மேலும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையின் தமிழ் மொழிப்பெயர்ப்பு என வாட்ஸ்அப்பில் செய்தி பரவிவருகிறது. அது அதிகாரப்பூர்வமானதா? என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும்" என உத்தரவிட்டனர். இதையடுத்து, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 19ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.