ETV Bharat / state

அரும்பாக்கம் வங்கி கொள்ளையர்களை 1 நாள் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி - வங்கி கொள்ளையில் மூன்று குற்றவாளி

அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கில் தொடர்புடைய மூன்று குற்றவாளிகளை 1 நாள் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அரும்பாக்கம் வங்கி கொள்ளையர்களை 1 நாள் விசாரிக்க... எழும்பூர் நீதிமன்றம் அனுமதி

author img

By

Published : Aug 25, 2022, 7:53 PM IST

சென்னை: அரும்பாக்கத்தில் உள்ள பெட் நகைக்கடன் வங்கியில் கடந்த 13ஆம் தேதி 31.7 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த வங்கியில் பணியாற்றிய ஊழியர் முருகன், தனது கூட்டாளியுடன் திட்டமிட்டு கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதனையடுத்து 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டு முக்கிய கொள்ளையனான முருகன், சூர்யா, சந்தோஷ், பாலாஜி, செந்தில்குமரன், நகை வியாபாரியான கோயம்புத்தூரைச்சேர்ந்த ஸ்ரீவத்சவா, அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ், கேப்ரியல் உள்ளிட்ட எட்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 31.7 கிலோ தங்க நகைகள் முழுவதுமாக மீட்கப்பட்டது. மேலும் இவர்கள் பயன்படுத்திய கார் மற்றும் இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் முக்கியக் குற்றவாளியான முருகன், சூர்யா, செந்தில் ஆகிய மூன்றுபேரை காவலில் எடுத்து விசாரிக்க அரும்பாக்கம் காவல் துறையினர் எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

எழும்பூர் குற்றவியல் நடுவர் ஜெகதீசன் மூன்றுபேரையும் 1 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். இந்த மூன்று குற்றவாளிகளில் முருகன் மற்றும் சூர்யா ஆகியோர் காவல் நிலையத்தில் சரணடையும்போது போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் செந்திலை கைது செய்தனர்.

குறிப்பாக செந்தில் கட்டுமானத்தொழில் செய்து வருவதும் , கொள்ளை அடித்த அன்று பல்லாவரம் விடுதிக்குச் சென்று மூன்று பேரும் சேர்ந்து 7.5 கிலோ நகைகளை எடுத்துச்சென்றதும், அங்கு நகை உருக்கும் இயந்திரத்தில் செந்தில் நகைகளை உருக்கியதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில், தற்போது மூன்று பேரையும் ஒரு நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினால் மேலும் சில தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:கஞ்சா புகைத்த காவலர்கள் 3 பேர் பணியிடை நீக்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.