ETV Bharat / state

தேசிய கல்விக் கொள்கை 2020 குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவாதிக்க கல்வியாளர்கள் கோரிக்கை! - பஞ்சாயத்து ராஜ் சட்டம்

சென்னை : மத்திய அரசின் புதிய தேசிய கல்வி கொள்கை 2020 குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் விரிவாக விவாதிக்க வேண்டுமென என தமிழக கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேசிய கல்வி கொள்கை 2020 குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவாதிக்க கல்வியாளர்கள் கோரிக்கை!

author img

By

Published : Aug 24, 2020, 3:45 PM IST

இது தொடர்பாக பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், "இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கல்வி அமைச்சகமாக பெயர் மாற்றம் பெற்றுள்ளது. அதன் கீழ் இயங்கும் பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவு துறையின் செயலாளர் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களின், ஒன்றிய பிரதேசங்களில் பள்ளிக் கல்வித்துறை செயலாளருக்கு ஆகஸ்ட் 21ஆம் தேதி கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில் தேசிய கல்வி கொள்கை 2020 நடைமுறைப்படுத்தும் வழிமுறைகளை எவ்வாறு முன்னெடுத்து செல்லலாம் என்ற கருத்துரைகள் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி முதல்வர்களிடம் கேட்கபட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து ஆழ்ந்த விவாதத்தை அரசு தனியார் பள்ளி ஆசிரியர்கள் முதல்வர்கள் நடத்தி தங்கள் கருத்தை மத்திய அரசின் வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவையின் ஒப்புதலோடு தேசிய கல்வி கொள்கை 2020 வெளியிடப்பட்டுள்ளது.

அது குறித்து நாடாளுமன்றத்திலும், மாநில சட்டப்பேரவையில் இன்னும் விவாதிக்கப்படவில்லை. மாநில அரசுகள் இன்னும் இது குறித்தான தங்கள் கருத்தை தெரிவிக்கவில்லை.

மாநில அரசின் அமைச்சரவை தேசிய கல்வி கொள்கை 2020 குறித்து விவாதித்து எந்த முடிவையும் மேற்கொள்ளவில்லை. மாநில அரசு தனது நிலையை தெரிவிப்பதற்கு முன்பாகவே, மாநில முதலமைச்சரின் தலைமையில் உள்ள அமைச்சரவைக்கு தெரிவிக்காமல், கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான கருத்துக்களை மாநில அரசு பள்ளி ஆசிரியர்களிடம் கருத்துக்களை பெறுவது குறித்து மத்திய அரசின் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் நேரடியாக மாநில பள்ளிக் கல்வித்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் தேசிய கல்வி கொள்கை 2020 நடைமுறைப்படுத்துவதற்கான கருத்துரைகளை மாநில பள்ளிக் கல்வித்துறை செயலாளர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்தக் கடிதம் வழக்கமான நிர்வாக செயலபாடு கிடையாது.

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அமைச்சரவை கூடி முடிவெடுக்க வேண்டிய அரசியல் கொள்கை நிலைப்பாடு சார்ந்ததாகும்.

மத்திய அரசின் செயலாளர் மாநில அரசின் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதம் கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையிலான இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. மத்திய மாநில அரசுகளின் அதிகார எல்லைகள் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வரையறை செய்யப்பட்டுள்ளது. தேசிய கல்வி கொள்கை 2020 - யின் பல்வேறு கூறுகள் நாடாளுமன்றத்திலும் இயற்றப்படும் சட்டத்தினால் நடைமுறைப்படுத்த இயலும்.

அதன் விளைவாக மாநில அரசும், மாநில சட்டப்பேரவையும் தங்கள் அதிகாரங்களை இழக்கக்கூடும்.

இத்தகைய தொலைதூரத் தாக்கங்களை கொண்ட கொள்கையினை நேரடியாக அரசு அலுவலர்கள் வாயிலாக நடைமுறைப் படுத்த முயல்வது நாடலுமன்ற ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்க மறுக்கும் செயலாகும்.

எனவே மத்திய அரசின் செயலாளர் ஆகஸ்ட் 21ஆம் தேதி அனுப்பிய கடிதத்தை இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு மதிப்பளித்து திரும்பப்பெற வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் இந்தக் கடிதம் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

தேசிய கல்வி கொள்கை 2020 குறித்து மாநில அரசு உரிய கருத்துக்களை வெளிப்படுத்தி தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இக்கொள்கையின் தாக்கங்கள் குறித்து முழுமையான விவாதத்தை மேற்கொள்ள வேண்டும்.

பஞ்சாயத்து ராஜ் சட்டம் வந்த பொழுது மாநில அரசுகள் வலுவான குரல் கொடுத்தது. அதனால் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாநில அரசின் வழியாக நிதி செல்வது உறுதி செய்யப்பட்டது.

எனவே, புதிய கல்விக் கொள்கை 2020 குறித்து மாநில அரசின் உரிமையை பாதுகாக்க உறுதியான நிலைப்பாட்டை தமிழ்நாடு அரசு இப்போது மேற்கொள்ள வேண்டும்" என அதில் வலியுறுத்தியுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.