பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா தலைமையில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் வரும் ஜூலை 16ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது .
இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டியவைகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை ஆணையர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில் , "அரசு உத்தரவை மீறி 100 விழுக்காடு கட்டணங்களை வசூலித்த பள்ளிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரங்களும், அங்கீகாரம் இல்லாத பள்ளிகளின் விவரமும், பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளைத் தடுப்பதற்காக அமைக்கப்பட்ட புகார் தடுப்பு குழுவின் விவரமும், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச திட்டங்களின் விவரங்களையும் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், 2011 ஆம் ஆண்டு முதல், 2021 ஆம் ஆண்டு வரையிலான கல்வியாண்டுகளில் அரசுப்பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த மாணவர்களில் எத்தனை மாணவர்கள் படிப்பைப் பாதியில் கைவிட்டு உள்ளார்கள் என்ற விவரங்களை ஆய்வுக் கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'நீட்டை எதிர்கொள்ளும் நெருக்கடிமிகு சூழல் உண்மையில் வருந்தத்தக்கதே!' - ஸ்டாலின்