சென்னை : அரசுப்பள்ளி மாணவர்கள் 1 லட்சம் பேருக்கு Rain Coats, Ankle Boots வழங்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
அதன்படி, 2022-2023 கல்வியாண்டில் மழைப்பொழிவு அதிகம் உள்ள மாவட்டங்கள், மலைப் பிரதேச மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் 1 லட்சம் பேருக்கு மட்டும் ரெயின்கோட், ஆங்கிள்பூட்ஸ் வழங்குவதற்கான கொள்முதல் செய்ய ஒப்பந்தம் கோரியுள்ளது.
மேலும், அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்க சுமார் 26 லட்சம் காலணிகள் கொள்முதல் செய்யவும் ஒப்பந்தம் கோரியுள்ளது. பள்ளி திறந்த உடன் பாடப்புத்தகங்கள் வழங்கும் போதே பிற கல்வி உபகரணங்கள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.