ETV Bharat / state

“போராடிய விவசாயிகள் மீதுள்ள குண்டாஸ் வழக்குகளை திரும்ப பெற வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்! - Etvbharat news in tamil

Edappadi Palaniswamy Statement: மேல்மா சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

edappadi palanisami
edappadi palanisami
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 17, 2023, 1:17 PM IST

சென்னை: மேல்மா சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், வழக்குகளை திரும்பப் பெற வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சட்டமன்றத் தொகுதி, அனக்காவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல்மா, தேத்துறை, குறும்பூர், நர்மா பள்ளம், நெடுங்கல், அத்தி, வடஆளப்பிறந்தான், இளநீர்குன்றம், வீரம்பாக்கம் ஆகிய 9 ஊராட்சிகளைச் சேர்ந்த சுமார் 3,300 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய விளை நிலங்களை 'சிப்காட் தொழிற்பூங்கா விரிவாக்கம்' என்ற பெயரில் கையகப்படுத்துவதற்கான அரசாணையை இந்த விடியா திமுக அரசு பிறப்பித்துள்ளது.

  • செய்யாறு தொகுதியில் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறப் போராட்டத்தில் ஈடுபட்ட அப்பாவி விவசாயிகள் 7 பேர் மீது போடப்பட்டுள்ள குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தை உடனடியாக திரும்ப பெற விடியா திமுக அரசுக்கு வலியுறுத்தல் !

    - மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் "புரட்சித்… pic.twitter.com/kVZ7L9LgF3

    — AIADMK (@AIADMKOfficial) November 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்: இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும், வேளாண் விளை நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்றும், அப்பகுதிகளில் வசிக்கும் விவசாயப் பெருங்குடி மக்கள் கடந்த சில மாதங்களாக அறப்போராட்டத்தைக் கையிலெடுத்து தொடர்ந்து போராடி வருகின்றனர். விவசாயப் பெருங்குடி மக்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 4.10.2023 அன்று, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

விவசாயிகள் மீது வழக்கு: போராட்டத்தில் பங்கெடுக்கும் விவசாயிகளுடைய தீவிரத்தைக் குறைக்க வேண்டும் என்றும், அவர்களுடைய ஆர்ப்பாட்டத்தை ஒடுக்க வேண்டும் என்றும், அந்தப் பகுதிகளில் இருக்கக் கூடிய இளைஞர்கள் மீதும், விவசாயப் பெருங்குடி மக்கள் மீதும் விடியா திமுக அரசு தொடர் வழக்குகளை பதிவு செய்துள்ளது.

எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த வழக்குகளைக் காரணம் காட்டி, எந்த விதமான முன்வழக்குகளும் இல்லாத விவசாயிகள் மீது தொடர் வழக்குகளைப் பதிவு செய்துள்ளதோடு, அவர்கள் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பார்கள் என்ற காரணத்தைக் காட்டி, தற்போது 7 விவசாயிகள் மீது குண்டர் தடுப்புக் காவல் போடப்பட்டிருக்கிறது. மேல்மா கூட்டு ரோடு, கூழமந்தல் போன்ற பகுதிகள் போர்க்களம்போல் காட்சி அளிக்கிறது.

குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் போடப்பட்டிருக்கின்ற முள் வேலிகளைப் போல, அங்கே முள் வேலிகளைக் கொண்டு வந்து தடுப்புகளை அமைத்து, பெரும் கலவரத்தை கட்டுப்படுத்தக் கூடிய வஜ்ரா வாகனங்களையெல்லாம் கொண்டு வந்து நிறுத்தி, விவசாயப் பெருங்குடி மக்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த இந்த அரசு முயல்கிறது.

காவல் துறையை ஏவல் துறையாக பயன்படுத்துகிறது: எனது தலைமையிலான அதிமுக அரசு, பல்லாயிரக்கணக்கான போராட்டங்களை சந்தித்திருக்கிறது. இல்லாத காரணங்களை எல்லாம் சொல்லி திமுக பல அமைப்புகளைத் தூண்டிவிட்ட போதிலும், அந்தப் போராட்டங்களுக்கெல்லாம் அதிமுக அரசு அனுமதி வழங்கி, காவல் துறை பாதுகாப்பையும் வழங்கியது. நியாயமான காரணங்கள் இருந்த பட்சத்தில், அவைகளை அதிமுக அரசு நிறைவேற்றியும் தந்திருக்கிறது.

விவசாயிகளின் போராட்டத்தைத் தடுப்பதற்கு துப்பில்லாத, போராட்டம் உருவாவதற்குண்டான காரணத்தைக் கண்டறிந்து, அதைத் தீர்த்து வைப்பதற்கும் வக்கில்லாத இந்த விடியா திமுக அரசு, காவல் துறையை தன்னுடைய ஏவல் துறையாக பயன்படுத்துவதை மட்டும் கனக்கச்சிதமாக செய்து கொண்டு வருகிறது.

அரசியல் எதிரிகளை பழி வாங்குவதற்கும், அரசு ஊழியர்களின் நியாயமான போராட்டங்களை ஒடுக்குவதற்கும், தங்கள் விவசாய நிலங்கள் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் வேளாண் பெருங்குடி மக்கள் நியாயமான அகிம்சை வழியில் போராடி வருவதை ஒடுக்குவதற்கும், விடியா திமுக அரசு காவல் துறையை தொடர்ந்து பயன்படுத்தி வருவது கடும் கண்டனத்திற்குரியது.

வழக்குகளை திரும்பப் பெற வலியுறுத்தல்: விவசாயப் பெருங்குடி மக்கள் 7 பேர் மீதான குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தை உடனடியாக விடியா திமுக அரசு திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில், விவசாயிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அவர்களுக்கு ஆதரவாக, அதிமுக போராட்டத்தையும், ஆர்ப்பாட்டத்தையும் முன்னெடுக்கும் என்று எச்சரிக்கிறேன்.

அதிமுக ஆட்சியில் நிலம் கையகப்படுத்த வேண்டிய சூழ்நிலை வந்தபோது, சம்பந்தப்பட்ட பகுதிகளில் இருபோக விவசாயம் நடைபெற்று வந்ததாலும், அந்நிலங்கள் விவசாயப் பணிகளுக்கு பயன்படக்கூடிய நிலமாக இருப்பதாலும், நிலம் கையகப்படுத்தும் நிலைப்பாட்டை அதிமுக அரசு கைவிட்டது. பொதுப் பிரச்னைகளில் அரசியல் செய்ய முன்வராத இயக்கம், அதிமுக.

மாறாக, எந்தப் பிரச்னையானாலும் அதில் அரசியல் செய்யும் இயக்கம்தான் திமுக. இது போன்ற வன்முறை அரசியலை நிறுத்திவிட்டு, விவசாயப் பெருங்குடி மக்கள் மீது போடப்பட்டுள்ள குண்டர் தடுப்பு காவல் சட்டம் மற்றும் இதர பிரிவுகளின் கீழ் போடப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், அவர்களது நியாயமான கோரிக்கைளை நிறைவேற்றிட வேண்டும் என்றும் இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

இதையும் படிங்க: சிப்காட்டிற்கு எதிராக போராடிய திருவண்ணாமலை விவசாயிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டம்.. அரசுக்கு எதிராக வலுக்கும் கண்டனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.