ETV Bharat / state

தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரத்தை தடுத்தி நிறுத்துக - ஈபிஎஸ் வலியுறுத்தல் - edappadi palanisamy on petrol bomb attacks

தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரத்தை தடுத்தி நிறுத்தி மக்கள் அச்சமின்றி வாழத்தேவையான நடவடிக்கைகளை எடுக்க முதலமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

வெடிகுண்டு கலாச்சாரத்தை தடுத்து நிறுத்த ஈபிஎஸ் வலியுறுத்தல்

author img

By

Published : Sep 26, 2022, 6:34 PM IST

சென்னை: இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அதிமுக இடைக்கால பொது செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு அமைதிப் பூங்காவாய் திகழ்ந்தது. சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. தமிழ்நாடு காவல்துறை சட்டப்படி, நியாயமாக, சுதந்திரமாக செயல்பட்டது. குற்றவாளிகள் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்பட்டனர். மக்கள் அச்சமின்றி வாழ்ந்தனர்.

இந்த விடியல் அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், தமிழ்நாடு முழுவதும் போதைப் பொருட்களின் கூடாரமாக மாறி உள்ளது. கொலை, கொள்ளை, பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் சர்வ சாதாரணமாக தினசரி நடைபெறுகின்றன. குற்றவாளிகள் அச்சமின்றி சுதந்திரமாக ஆயுதங்களுடன் நடமாடி வரும் நிகழ்வுகள் அனைத்து ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகளாக வெளிவருகின்றன.

இதுபோன்ற நிகழ்வுகளினால், மக்கள் ஒருவித அச்சத்துடனேயே வாழ்கின்றனர். குறிப்பாக, பெண்கள் வீட்டிலிருந்து வெளியில் செல்லவே அச்சப்படுகின்றனர். கடந்த வாரத்தில் கோவை, திருப்பூர், சேலம், மதுரை, தாம்பரம் உள்ளிட்ட பல இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் போதைப் பொருள் கலாச்சாரம் போன்று வெடிகுண்டு கலாச்சாரமும் தலைதூக்கி உச்சத்தில் உள்ளது.

எங்களது ஆட்சியில் சுதந்திரமாக, சட்டப்படி செயல்பட்ட காவல்துறை தற்போது செயலற்று உள்ளது. இதுபோன்ற வன்முறைகளைக் கட்டுப்படுத்த முடியாமல், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியாமல், மாய உலகம் ஒன்றில் வாழும் ஒரு நிர்வாகத் திறனற்ற முதலமைச்சரை தமிழ்நாடு பெற்றுள்ளது வேதனைக்குறியது.

எப்போதெல்லாம் திமுக ஆட்சி அமைக்கிறதோ, அப்போதெல்லாம் வெடிகுண்டு கலாச்சாரம் தமிழ்நாட்டில் தலைவிரித்தாடுகிறது. தனி மனிதரின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை ஆளும் திமுகவினர் உருவாக்கி வருகின்றனர். இது, அமைதியான தமிழ்நாட்டிற்கு மிகவும் ஆபத்தான போக்காகும். இனியாவது இந்த விடியா திமுக அரசு, வெடிகுண்டு கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்தி, தமிழ்நாடு மக்கள் அச்சமின்றி வாழத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:அரசு அதிகாரிகளை குறிவைத்து கலங்கடிக்கும் போலி விஜிலென்ஸ் அதிகாரிகள்

தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரத்தை தடுத்தி நிறுத்துக - ஈபிஎஸ் வலியுறுத்தல்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.