ETV Bharat / state

அதிமுக ஆட்சியில் நிறைவேறாத பணிகள் - அமைச்சர் எ.வ.வேலு - அதிமுக

அதிமுக ஆட்சியில் ஒப்பந்த காலத்திற்குள் எந்த பணிகளும் நிறைவு பெறவில்லை என நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு குற்றம் சாட்டியுள்ளார்.

ஆட்சியில் இருந்தபோது மேம்பாலப் பணிகளை கண்டுகொள்ளாத அதிமுக தான் என்று குற்றங்சாட்டியுள்ளார்
நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு
author img

By

Published : Oct 16, 2021, 8:57 PM IST

சென்னை: அண்மையில், சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலுக்குக் காரணம் கோயம்பேடு மேம்பாலப் பணிகள் கால தாமதமாக நடைபெறுவதே என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு அதிமுக ஆட்சியில் செய்த பணிகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

2015ல் தொடங்கிய பணிகள்

"சென்னையில் தமிழ்நாடு அரசால் பாலம் கட்டும் பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், கோயம்பேட்டில் உயர்மட்ட சாலை மேம்பாலத்தை திறக்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமி கேட்டுள்ளார். இந்த பணி ரூ.93.50 கோடி மதிப்பீட்டில் 29.09.2015 ல் துவக்கப்பட்டது. இப்பணி 28.06.2018 க்குள் முடிக்கப்பட்டிருக்க வேண்டும்" என்று கூறினார்.

மேலும், இந்த உயர்மட்ட மேம்பாலப் பணியுடன், சேவை சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணியும் முழுமையாக நடைபெற்று முடிந்திருக்க வேண்டும். ஆனால் 2018 வரை எதுவும் நடைபெறவில்லை. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின் "அந்த துறையின் அமைச்சர் என்ற முறையில் நேரடியாக இரு முறை 18.07.2021 மற்றும் 18.09.2021ல் பார்வையிட்டு விரைந்து முடிக்க அதிகாரிகள், ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டேன் " என்று தெரிவித்தார்.

எதிர்க் கட்சித் தலைவருக்கு அமைச்சர் எ.வ.வேலு கேள்வி
ஆட்சியில் இருந்தபோது என்ன செய்தீர்கள்..

நீதிமன்றத்தில் நிலுவை வழக்கு

நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த மேல்முறையீட்டு (மனு எண். 123/2021) மனுவை, அரசின் சார்பாக முயற்சி செய்து சாதகமான தீர்ப்பினை 29.09.2021ல் தான் அரசு பெற்றது. அதில் கட்டப்பட்டிருந்த கட்டிடத்தையும், ஆக்கிரமிப்புகளையும் சில தினங்களுக்கு முன் தான் அகற்றினோம். இப்பணிகள் எதனையும் செய்யாமல் கடந்த மூன்று ஆண்டுகளாக காலத்தை வீணாகக் கடத்தியது, உங்கள் அரசு தான். இறுதி கட்டப் பணிகளை அரசு 31.10.2021 க்குள் முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கோயம்பேடு மேம்பாலம் கொண்டுவரப்படும் என்று கூறியுள்ளார்.

உறங்கிய பணிகள்

வேளச்சேரி புறவழிச்சாலையில் 29.06.2012 அன்று ரூ.108 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணிக்கான உத்தரவு வழங்கப்பட்டது. மூன்று ஆண்டு கால தாமதத்திற்குப் பின் 23.12.2015ல் ஒப்பந்ததாரர் பணியினை துவக்கினார். இந்த பணி ஒப்பந்தப்படி 22.09.2018 ல் முடித்திருக்க வேண்டும். ஆனால், மாறாக "பணியினை முடிக்க வேண்டிய காலம் முடிந்த பின்னர் 23 மாதங்கள் கும்பகர்ணனை போல உறக்க நிலையில் இருந்தது உங்களுடைய ஆட்சி தான்.

திமுக அரசு பொறுப்பேற்ற பின் பொதுப்பணித்துறை அமைச்சர் என்ற முறையில் அப்பணிகளை 18.07.2021 ல் நானே நேரடியாக களத்தில் ஆய்வு செய்தேன்.

மேலும், வேளச்சேரி மேம்பாலப்பணியின் இரண்டாம் அடுக்கினை 31.10.2021 ஆம் தேதிக்குள்ளும் முதல் அடுக்கினை 31.12.2021 க்குள்ளும் முடிக்கும்படி அலுவலர்களுக்கும், ஒப்பந்தக்காரர்களுக்கும் அறிவுரை வழங்கினேன். இரண்டாம் அடுக்கு இம்மாத இறுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.

தனியாரிடம் ஒப்பந்தம்

மேடவாக்கம் மேம்பாலப் பணிக்கான மதிப்பீடு ரூ.133.10 கோடியில் 14.08.2015 ல் வழங்கப்பட்டது. இப்பணிக்கான உத்தரவு 08.01.2016 ல் சன்ஷைன் தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. ஒப்பந்ததாரர் பணியினை செயல்படுத்துவதில் மெத்தனமாக இருந்ததால் ஒப்பந்தம் 14.08.2018ல் ரத்து செய்யப்பட்டது. மறுபடியும் ஒப்பந்தம் கோரிய ரெனாட்டஸ் தனியார் நிறுவனத்திற்கு 12.12.2018 ல் பணி உத்தரவு வழங்கப்பட்டது. இந்நிறுவனம் 12.09.2020 க்குள் பணியினை முடித்திருக்க வேண்டும்.இருப்பினும் இப்பணிகள் முடிக்கப்படவில்லை.

நேரடி ஆய்வு

மேற்கண்ட, மேடவாக்கம் சாலை மேம்பாலப் பணிகளை 18.07.2021 அன்று நானே நேரடியாக பார்வையிட்டேன். அந்த மேம்பாலப் பணியினை 31.12.2021 க்குள் முடிக்கும்படி அலுவலர்களுக்கும், ஒப்பந்தக்காரர்களுக்கும் அறிவுரை வழங்கியுள்ளேன். ஒப்பந்த காலத்திற்குள் பணிகளை முடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது எடப்பாடி அரசு தான். இன்று போக்குவரத்து நெரிசலை குறைத்திட சாலை மேம்பாலப்பணிகள் கால தாமதமாக நடைபெறுவதாக நீலிக்கண்ணீர் வடிப்பது ஏன் ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க: 'அதிமுகவுக்கு இனி எதிர்காலம் இல்லை' - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.