ETV Bharat / state

நிவர் புயல் முன்னெச்சரிக்கை - அரசு அலுவலர்களுடன் ஆலோசனை நடத்திய தமிழ்நாடு முதலமைச்சர்! - நிவர் புயல்

சென்னை: நிவர் புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

முதலமைச்சர்
முதலமைச்சர்
author img

By

Published : Nov 23, 2020, 6:01 PM IST

வங்க கடலில் உருவாகியுள்ள ’நிவர்’ புயல் வரும் 25ஆம் தேதி காரைக்கால்-மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (நவ. 23) தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், புயல் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய உடனடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் துறைச் சார்ந்த அமைச்சர்களிடம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார். நிவர் புயல் தொடர்பாக அனைத்து மீட்பு நடவடிக்கைகளும் தயார் நிலையில் வைத்திருக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இக்கூட்டத்தில், மின்சாரம், மதுவிவக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி . தங்கமணி , நகராட்சி நிர்வாகம் , ஊரக வளர்ச்சி, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி , மீன்வளம் , பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்தத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார், வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் , தலைமைச் செயலாளர் க. சண்முகம், காவல் துறை தலைமை இயக்குநர் திரிபாதி , மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.