ETV Bharat / state

கரோனா சோதனை செலவில் பாதியை மத்திய அரசு ஏற்க பிரதமரிடம் முதலமைச்சர் வலியுறுத்தல் - edapadi palanisamy request to fund

சென்னை: கரோனா தொற்று பரிசோதனைக்கு ஏற்படும் செலவில் பாதியை மத்திய அரசு பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

edapadi palanisamy  edapadi palanisamy request to fund  m pm cares
கரோனா பரிசோதனை செலவில் பாதியை மத்திய அரசு ஏற்க வேண்டும் - பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் வலியுறுத்தல்
author img

By

Published : Sep 23, 2020, 9:54 PM IST

கரோனா பாதிப்பு அதிகமுள்ள 8 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, "நாட்டிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக அளவிலான ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதற்காக நாள் ஒன்றுக்கு 6.8 கோடி ரூபாய் செலவு ஏற்படுகிறது. தொடர்ந்து இது போன்ற பரிசோதனைகள் செய்யப்படுவதால் மாநிலத்தின் நிதி நிலைமை மோசமடைந்து உள்ளது. ஆகையால், பரிசோதனைக்கு ஏற்படும் செலவில் 50 விழுக்காடு நிதியை பிஎம் கேர்ஸ் நிதித் தொகுப்பிலிருந்து வழங்க வேண்டும்.

தமிழ்நாட்டில் 66 அரசு மற்றும் 110 தனியார் பரிசோதனை மையங்கள் மூலமாக நாளொன்றுக்கு சுமார் 85 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுவரை ஒட்டுமொத்தமாக 66 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உயிரிழப்பு விகிதம் 1.62 விழுக்காடாக உள்ளது. புதிய தொற்று பாதிப்பு ஏற்படுவது கடந்த ஜூலை மாதத்தில் 10.47 விழுக்காடாக இருந்த நிலையில், தற்பொழுது 6.2 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் எந்த மாவட்டத்திலும் 10 விழுக்காட்டுக்கும் மேல் புதிய பாதிப்புகள் ஏற்படவில்லை. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டால் இது சாத்தியமானது. அதேபோல், தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் நாட்டிலேயே அதிகபட்சமாக 90 விழுக்காடாக உள்ளது.

கரோனா பாதிப்பு தொடர்பான கருவிகள், உபகரணங்கள், மருந்துகள் தொடர்பான உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு இதுவரை 50 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ளன. பொருளாதாரத்தை வலுப்படுத்துவது தொடர்பாக முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரங்கராஜன் தலைமையிலான குழுவின் பரிந்துரைகள் குறித்து பரிசீலனை செய்துவருகிறோம்.

கரோனா பாதிப்பை சமாளிக்க அவசர நிதியிலிருந்து மத்திய அரசு 511 கோடி ரூபாய் வழங்கிய நிலையில், இதனை 3,000 கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும்.

மேலும், மாநில பேரிடர் நிவாரண நிதி தொகுப்பில் உள்ள நிதி முற்றிலுமாக செலவழிக்கப்பட்டுள்ளதாகவும், தேசிய பேரிடர் மேலாண்மை தொகுப்பில் இருந்து கூடுதலாக 1,000 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும்.

இவற்றோடு சிஎம்ஆர் மானியமாக 1,321 கோடி ரூபாயை நிலுவைத் தொகையை தமிழ்நாடு அரசுக்கு வழங்கினால் நெல் கொள்முதல் செய்ய உதவும்" என பேசியுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழ்நாடு அரசின் கரோனா நடவடிக்கையை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

இதையும் படிங்க: ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம் - அக்டோபரில் அமல்படுத்த முதலமைச்சர் ஆலோசனை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.