ETV Bharat / state

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஈபிஎஸ் திடீர் ஆய்வு..! நடந்தது என்ன..? - மயிலாடுதுறை

மழையால் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி திடீரென ஆய்வு மேற்கொண்டிருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது.

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஈபிஎஸ் திடீர் ஆய்வு..! நடந்தது என்ன

author img

By

Published : Nov 16, 2022, 10:30 PM IST

சென்னை: அதிமுகவின் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் முழுமையாக வெற்றி பெறமுடியவில்லை என்ற சூழலில், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மிகவும் சோர்வாக செயல்பட்டு வருகின்றனர். பாஜக தான் தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று கூறும் அளவுக்கு அதிமுக பலவீனம் அடைந்து காணப்படுகிறது.

சமீபத்தில் சொத்து வரி உயர்வு, பால் கட்டண உயர்வு மற்றும் மின்கட்டண உயர்வு போன்றவை தமிழ்நாடு அரசால் கொண்டுவரப்பட்டது. அப்போது கூட சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தை வைத்திருக்கும் அதிமுக கேள்வி எழுப்பத் தவறிவிட்டது. இதன் காரணமாக திமுக அரசு எந்தவிதமான சலனமும் இல்லாமல் ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது. இதில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இரண்டு மற்றும் மூன்று நாட்களாக தண்ணீர் தேங்கியது.

"சாதாரண மழைக்கே இப்படி தண்ணீர் தேங்கி இருக்கிறது. அதிமுக ஆட்சியில் பெய்தது போல மழை பெய்திருந்தால் மிகவும் கடினமாக இருந்திருக்கும்" என ஈபிஎஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார். இதற்குப் பதில் கூறிய அமைச்சர் சேகர் பாபு, "ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவராக இருந்து கொண்டு, நேரடியாக மக்களை சந்திக்கவில்லை. ஆனால், தண்ணீரை வெளியேற்றுவதற்காக அரசு செயல்படும் விதத்தைக் குறை கூறுகிறார்" என கூறினார்.

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக மழையால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளுக்கு ஈபிஎஸ் திடீரென ஆய்வு மேற்கொண்டுள்ளார். குறிப்பாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள முகலிவாக்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து இன்று 44 செ.மீ., மழை பெய்த மயிலாடுதுறை மற்றும் கடலூர் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் நலத்திட்ட உதவிகளும் வழங்கினார். ஈபிஎஸ்சின் ஆய்வின் பலனாக சென்னையில் அவர் ஆய்வு மேற்கொண்ட பகுதியில் மறுநாள் அமைச்சர் கே.என்.நேரு சென்று, விரைவில் சரிசெய்யப்படும் என்ற உத்தரவாதத்தை அளித்துள்ளார்.

ஈபிஎஸ்சின் திடீர் ஆய்வுக்கு என்ன காரணம் என்று அவரது தரப்பினரிடம் விசாரிக்கும் போது, "அதிமுக உட்கட்சி பிரச்னை ஒருபுறம் இருந்தாலும், மக்களுக்கான பிரச்னையில் கவனம் செலுத்த வேண்டும். பாஜக தான் எதிர்க்கட்சி போல் செயல்படுவதாக ஒரு தோற்றம் உருவாகிக் கொண்டிருக்கிறது.

மழையின்போது மக்களை சந்திக்க வேண்டும். சந்திக்காதது மிகப்பெரிய விமர்சனமாக மாறி வருகிறது. பொதுக்குழு தொடர்பான வழக்கும் விரைவில் வரவுள்ளது. இதனால் நாம் வேகமாக செயல்பட வேண்டும்" என சென்னையில் உள்ள மாவட்ட செயலாளர்கள் ஈபிஎஸ்க்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இதை ஏற்ற ஈபிஎஸ், முதலமைச்சர் கடலூர், மயிலாடுதுறையில் ஆய்வு மேற்கொண்டபோது சென்னையில் இவர் ஆய்வில் இறங்கியுள்ளார்.

இதையும் படிங்க: பொய் செய்தி பரப்பும் முதலமைச்சர்: இபிஎஸ் குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.