சென்னை: சென்னை கோடம்பாக்கத்தைs சேர்ந்த சட்டப் பேராசிரியரான ஆர்.கார்த்திகேயன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 1964ஆம் ஆண்டு முதல் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை, ஊழலுக்கு எதிராக பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்து விசாரணை செய்து வருவதாகவும், கடந்த 2020-2102ஆம் ஆண்டில் மட்டும் 553 வழக்குகளை லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்திருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்யும் வழக்குகளின் அடிப்படையில், அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரிக்கிறது. இதில் பல வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை கிடைக்காததால், அமலாக்கத் துறையால் வழக்குகளை தொடர்ந்து நடத்த முடியாத நிலை உள்ளதால், லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்யும் முதல் தகவல் அறிக்கைகள், சேகரிக்கும் ஆவணங்களை அமலாக்கத் துறைக்கு வழங்க உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கங்கபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, லஞ்ச ஒழிப்புத் துறை முதல் தகவல் அறிக்கைகளை அமலாக்கத் துறையிடம் வழங்க எந்த சட்டப்பிரிவும் அனுமதி வழங்கவில்லை என்பதால், முதல் தகவல் அறிக்கைகளை அமலாக்கத் துறைக்கு அனுப்பும்படி உத்தரவிட முடியாது என உத்தரவிட்டது.
இதையும் படிங்க: பாதுகாப்பு வேண்டி முருகன் தரப்பில் மனு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!