ETV Bharat / state

சூழலைப் பாதுகாக்கும் 'ஜீரோ வேஸ்ட்' கடை! - மயிலாப்பூர் ஜீரோ வேஸ்ட் கடை

சென்னையைச் சேர்ந்த கடை ஒன்று முழுக்க முழுக்க நெகிழி இல்லாமலும் குப்பைக் கழிவுகளை உருவாக்காமலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் நடத்தப்படுகிறது.

Ecoindian
Ecoindian
author img

By

Published : Dec 5, 2019, 2:30 PM IST

Updated : Dec 6, 2019, 8:13 PM IST

பரபரப்பான சென்னை நகரின் நடுவே மயிலாப்பூரில் எகோ இந்தியன் என்னும் பெயரில் ரசாயன உரங்கள் இல்லாமல், இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பலசரக்கு பொருள்கள் விற்பனை செய்யும் கடை இயங்கிவருகிறது. இங்கு இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட சிறுதானியங்கள், ரசாயனம் இல்லாமல் தயாரிக்கப்பட்ட அரிசி, பருப்பு வகைகள், மரச்செக்கு எண்ணெய், மறு சுழற்சி செய்யப்பட்ட காகிதத்தில் செய்யப்பட்ட எழுதுகோள் என சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு முறை பயன்படுத்தப்படும் நெகிழி தடைசெய்யப்பட்டிருந்தாலும் பைகள் தவிர்த்து, உணவுப் பொருள்கள் மூடப்படும் நெகிழிக் கவர்கள், நெகிழி பாட்டில்கள், நெகிழியால் செய்யப்பட்ட இதர பொருள்கள் என நமது அன்றாட வாழ்க்கையில் தெரிந்தும், தெரியாமலும் பல இடங்களில் நெகிழியைப் பயன்படுத்துகிறோம்.

இவற்றுக்கு மாற்றாக பாரம்பரிய பொருள்களைப் பயன்படுத்துவதும், முடிந்தவரையில் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருள்களைப் பயன்படுத்துவதும்தான் இந்தக் கடையின் சிறம்பம்சம். நெகிழிக்கு மாற்றாக கண்ணாடி பாட்டில்களில் எண்ணெய் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு வைப்புத்தொகை செலுத்திவிட்டு பாட்டில்களில் எண்ணெயை வாங்கும் வாடிக்கையாளர்கள், பாட்டில்களைத் திரும்பச் செலுத்தி அந்தப் பணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். வீட்டிலிருந்தே துணி பை, பாட்டில்கள் கொண்டுவரும் வாடிக்கையாளர்களுக்கு பொருள்களின் விலையில் ஐந்து விழுக்காடுவரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இதன்மூலம் மறுசூழற்சி செய்யப்படுவதற்கு அவர்கள் ஊக்குவிக்கப்படுவதாகக் கூறுகிறார் கடையின் உரிமையாளர் பிரேம். இது தொடர்பாக நமது ஈடிவி பாரத் செய்தியாளரிடம் பேசிய அவர், "ஆர்கானிக் பொருள்களை விற்பனை செய்யும்போது நெகிழிப் பயன்படுத்துவது நெருடலாக இருந்தது. அப்போதுதான் நெகிழி இல்லாத சில்லறை விற்பனை கடையைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. பின் கடை முழுவதும் பாரம்பரியம் சார்ந்த இயற்கைக்கு உகந்த பொருள்களை விற்பனை செய்யத் தொடங்கினோம்" என்று கூறுகிறார்.

இரண்டு வருட உழைப்பை கொடுத்து அவர் உருவாக்கியுள்ள இந்தக் கடையில் மக்கள் ஆர்வத்துடன் தேடிவந்து பொருள்களை வாங்கிச் செல்கின்றனர். தனியாக ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் நடத்தும் அவருக்கு, இந்தக் கடை மூலம் பெரிய அளவுக்கு வருவாய் கிடைக்கவில்லை என்றாலும் மனதுக்கு நெருக்கமாக இருப்பதால் இதனை செய்வதாகவும் வாடிக்கையாளர்கள் வருகை நாளுக்குநாள் அதிகரிப்பதால் இனிவரும் நாள்களில் நிலைமை மாறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

அதேபோல், இந்தக் கடையில் உள்ளூரில் விளைவிக்கப்பட்ட பொருள்களே அதிகம் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் உள்ளூர் விவசாயிகள் பலனடைவதோடு, நீண்ட தூரத்திலிருந்து பொருள்கள் எடுத்து வரப்படுவதால் ஏற்படும் கரியமில வாயு வெளியேற்றம் குறையும் என்றும், பேக்கேஜில் நெகிழிப் பயன்பாடு குறையும் என்றும் தனது காரணத்தை விளக்குகிறார்.

சாதாரண கடைகளில் பைகளில் அடைத்து விற்பனை செய்யும் அனைத்து பொருள்களும் இங்கு பாட்டில்களில் அடைத்தே வைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப அவை எடை போடப்பட்டு காகிதப்பைகள், துணிப் பைகளில் வழங்கப்படுகின்றன.

இதுபோன்ற நெகிழிப் பயன்பாடற்ற, இயற்கைக்கு நெருக்கமான வாழ்க்கை முறை, மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே உரியது கிடையாது என்று கூறும் பிரேம், இதுபோல் பலராலும் கடை நடத்த முடியும் என விருப்பமுள்ளவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கிறார். மேலும் இந்த நடைமுறையை பின்பற்றி நிலையான வருவாயை ஈட்ட முடியும் எனவும் அவர் தெரிவிக்கிறார்.

சூழலைப் பாதுகாக்கும் 'ஜீரோ வேஸ்ட்' கடை

நெகிழி, தேவையற்ற கழிவுகளைத் தவிர்த்து ஜீரோ வேஸ்ட் கடையை நடத்துவதால் இயற்கையை பாதுகாக்க கடைக்காரர், வாடிக்கையாளர்கள் என இரண்டு தரப்பினரும் தங்களின் பங்கை ஆற்றுகின்றனர். இதனைப் பின்பற்றி பலரும் பூமியை குளிர்விக்க வேண்டும். வாருங்கள் மாற்றம் நம்மிடமிருந்தே தொடங்கட்டும்!

இதையும் படிங்க: தரமான கல்வியை அளிப்பது குறித்து ஆய்வு - பள்ளிக்கல்வித்துறை

Intro:ETV Bharat Plastic awareness campaign special storyBody:பிளாஸ்டிக் பிரச்சாரம் சிறப்பு செய்தி

சூழலை பாதுகாக்கும் 'ஜீரோ வேஸ்ட்' கடை!

சென்னை:

சென்னையைச் சேர்ந்த கடை ஒன்று முழுக்க முழுக்க பிளாஸ்டிக் இல்லாமலும், குப்பை கழிவுகளை உருவாக்காமலும் சூற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் நடத்தப்படுகிறது.

பரபரப்பான சென்னை நகரின் நடுவே மயிலாப்பூரில் எகோ இந்தியன் எனும் பெயரில் ரசாயன உரங்கள் இல்லாமல், இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பலசரக்கு பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தப்படுகிறது. இங்கு இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட சிறுதானியங்கள், ரசாயனம் இல்லாமல் தயாரிக்கப்பட்ட அரிசி, பருப்பு வகைகள், மரபு சார்ந்த மளிகை சாமான்கள், மரச் செக்கு எண்ணெய், ரசாயனம் இல்லாத குளியல் பொருட்கள், தூய்மைப்படுத்தும் சமான்கள், அழகு சாதான பொருட்கள், மறு சுழற்சி செய்யப்பட்ட காகிதத்தில் செய்யப்பட்ட எழுதுகோள், மரத் தட்டு, மரத்தினாலான ஸ்பூன்கள், மர ஸ்டிரா, துணிப் பைகள், பேப்பர் பைகள் என சூழலுக்கு உகந்த வகையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழக அரசு சார்பில் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டிருந்தாலும் பைகள் தவிர்த்து, உணவுப் பொருட்கள் மூடப்படும் பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட இதர பொருட்கள் என நமது அன்றாட வாழ்க்கையில் தெரிந்தும், தெரியாமலும் பல இடங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்துகிறோம். இவற்றுக்கு மாற்றாக பாரம்பரிய பொருட்களை பயன்படுத்துவதும், முடிந்தவரையில் மறு சுழற்சி செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்துவதும்தான் இந்தக் கடையின் சிறம்பம்சம். பிளாஸ்டிக்கு மாற்றாக கண்ணாடி பாட்டில்களில் எண்ணெய் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு வைப்பு தொகை செலுத்திவிட்டு பாட்டில்களில் எண்ணெயை வாங்கும் வாடிக்கையாளர்கள், பாட்டில்களைத் திரும்பச் செலுத்தி அந்தப் பணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். வீட்டிலிருந்தே துணிப் பை, பாட்டில்கள் கொண்டு வரும் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களின் விலையில் ஐந்து சதவிகிதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன்மூலம் மறுசூழற்சி செய்யப்படுவதற்கு அவர்கள் ஊக்குவிக்கப்படுவதாகக் கூறுகிறார் கடையின் உரிமையாளர் பிரேம். இது தொடர்பாக ஈடிவி பாரத் செய்திகளிடம் பேசிய அவர், "ஆக்கானிக் பொருட்களை விற்பனை செய்யும்போது பிளாஸ்டிக் பயன்படுத்துவது நெருடலாக இருந்தது. அப்போதுதான் பிளாஸ்டிக் இல்லாத சில்லறை விற்பனை கடையைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. பின் கடை முழுவதும் பாரம்பரியம் சார்ந்த இயற்கைக்கு உகந்த பொருட்களை விற்பனை செய்யத் தொடங்கினோம்" என்று கூறுகிறார். இரண்டு வருட உழைப்பை கொடுத்து அவர் உருவாக்கியுள்ள இந்தக் கடையில் மக்கள் ஆர்வத்துடன் தேடி வந்து பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். தனியாக இவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் நடத்தும் அவர், இந்தக் கடை மூலம் பெரிய அளவுக்கு வருவாய் கிடைக்கவில்லை என்றாலும் மனதுக்கு நெருக்கமாக இருப்பாதல் இதனை செய்வதாகவும், வாடிக்கையாளர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரிப்பாதல் இனி வரும் நாட்களில் நிலைமை மாறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவக்கிறார். அதேபோல், இந்தக் கடையில் உள்ளூரில் விளைவிக்கப்பட்ட பொருட்களே அதிகம் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் உள்ளூர் விவசாயிகள் பலனடைவதோடு, நீண்டு தூரத்தில் இருந்து பொருட்கள் எடுத்துவரப்படுவதால் ஏற்படும் கரியமில வாயு வெளியேற்றம் குறையும் என்றும், பேக்கேஜில் பிளாஸ்டிக் பயன்பாடு குறையும் என்றும் தனது காரணத்தை விளக்குகிறார். சாதாரண கடைகளில் பைகளில் அடைத்து விற்பனை செய்யும் அனைத்து பொருட்களும் இங்கு பால்டில்களில் அடைத்தே வைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப அவை எடை போடப்பட்டு காகித் பைகள், துணிப் பைகளில் வழங்கப்படுகிறது. "கடையில் இருந்து வீட்டுக்கு செல்லும் வழியில் ஏராளமான போக்கேஜ் செய்யப்படுகிறது. இதனைக் குறைத்தால் தேவையற்றை குப்பைகளைக் குறைக்க முடியும். இதற்காக பிரபல நிறுவன சோப்கள் வெளிப்புற கவர்கள் இல்லாமல் பிரத்யேகமாகப் வரவழைக்கப்படுகிறது. இவற்றின் மூலம் குப்பைகளைக் குறைப்பதோடு, அதற்கு செலவிடப்படும் பணத்தை மிச்சப்படுத்தி வாடிக்கையாளர்களுக்கே பலனாகக் கொடுக்கிறோம்". இதுபோன்ற பிளாஸ்டிக் பயன்பாடற்ற, இயற்கைக்கு நெருக்கமான வாழ்க்கை முறை மேல் தட்டு மக்களுக்கு மட்டுமே உரியது கிடையாது என்றும் கூறும் பிரேம், இதுபோல் பலராலும் கடை நடத்த முடியும் என விருப்பமுள்ளவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கிறார். மேலும் இந்த நடைமுறையை பின்பற்றி நிலையான வருவாயை ஈட்டி முடியும் எனவும் அவர் தெரிவிக்கிறார். பிளாஸ்டிக் தவிர்த்து, தேவையற்ற கழிவுகளைத் தவிர்த்து ஜூரோ வேஸ்ட் கடையை நடத்துவதால் இயற்கையை பாதுகாக்க கடைக்காரர் மற்றும் வாடிக்கையாளர்கள் என இருதரப்பினரும் தங்கள் பங்காற்றுகின்றனர். இதனை பின்பற்றி பலரும் பூமியை குளிர்விக்க வேண்டும். வாருங்கள் மாற்றம் நம்மிடம் இருந்தே தொடங்கட்டும். Conclusion:visual in mojo

Use bites, explanatory portions.
Last Updated : Dec 6, 2019, 8:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.