கரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், இதுவரை ஒன்பது சட்டப்பேரவை உறுப்பினர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ. அன்பழகன் உயிரிழந்த சம்பவம் பலரையும் திடுக்கிட வைத்தது. ஏற்கனவே அமைச்சர் கே.பி. அன்பழகன் தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணிக்கும் கரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னை கிரீம்ஸ் சாலயில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், நேற்று முன்தினம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த ஐவர் குழு ஆலேசானைக் கூட்டத்தில் தங்கமணி கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி. முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: மக்கள் ஒத்துழைத்தால் 100 விழுக்காடு மீண்டெழுவோம் - ஆர்.பி.உதயகுமார்