ETV Bharat / state

'ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்தபட்சம் ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும்'

சென்னை: ஊரடங்கு உத்தரவினால் மக்களின் வாழ்க்கை முடங்கியுள்ள நிலையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5 ஆயிரம் ரூபாய் அரசு வழங்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

ks alagiri Congress  கே எஸ் அழகிரி  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர்  கரோனா நிவாரணம்  k s alagiri news
ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்தபட்சம் 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்
author img

By

Published : Apr 16, 2020, 12:28 PM IST

Updated : Apr 16, 2020, 3:38 PM IST

சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், "பிரதமர் இதுவரை மூன்று முறை தொலைக்காட்சியில் பேசி இருக்கிறார். ஆனால், நோய்க்கான மருந்து, மக்களுக்கான நிவாரணம் பற்றி அறிவிக்கவில்லை. இந்தியாவில் 40 கோடி அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்ளனர்.

முழு அடைப்பால் அவர்கள் உணவின்றி, வருமானமின்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கான உணவுக்கு அரசு உத்தரவாதம் தர வேண்டும். இதனை அரசு செய்ய முன்வரவில்லை. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இதை வன்மையாக கண்டிக்கிறது. இவர்களுடைய வங்கி கணக்கில் ரூ. 5 ஆயிரம் அரசு செலுத்தினால் எந்த பிரச்னையும் இல்லாமல் ஊரடங்கு வெற்றி பெறும்.

தமிழ்நாட்டிலும் மாநில அரசாங்கம் ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக சொன்னார்கள். ஆனால், பாதி இடத்திற்கு மட்டும்தான் அந்தப் பணம் போய் சேர்ந்துள்ளது. விவசாயிகளும் அவர்களுடைய கொள்முதல்களை எடுத்துச் செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே, விவசாயிகள் விளைச்சலை சந்தைக்கு எடுத்துச் செல்ல அரசு உதவி செய்ய வேண்டும். உழைப்பை நம்பி இருக்கின்ற மக்களுக்கு மருத்துவமும், நிவாரணமும் அளிக்க வேண்டும்.

"ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்தபட்சம் 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்"

ராபிட் டெஸ்ட் கருவி ஒன்பதாம் தேதி வரும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். ஆனால் இன்று வரை வரவில்லை. இந்த அரசு நிர்வாகம் எவ்வளவு செயலிழந்து இருக்கிறது என்பதற்கு இதுவே ஒரு உதாரணம். மருத்துவம் என்பது மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. மாநில அரசுகள் மருத்துவ உபகரணங்களை கொள்முதல் செய்யலாம். இதில், மத்திய அரசு ஏன் தலையிடுகிறது என்பது புரியவில்லை. நம்முடைய முதலமைச்சரும் இதைப் பற்றி வாய் திறக்காமல் இருக்கிறார்.

எதிர்க்கட்சிகளையும் அரசு அழைத்து கூட்டம் போட்டிருந்தால் அவை தனியாகக் கூட்டம் போட வேண்டிய அவசியம் வந்திருக்காது. இவர்கள் எங்களை அழைத்துப் பேசாத காரணத்தால்தான் நாங்கள் அனைத்து எதிர்க்கட்சிகளும் சேர்ந்து ஆலோசனை செய்ய இருந்தோம். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் வெறும் 11 பேர்தான் கலந்துகொள்ள இருந்தோம்.

நிவாரணத்தை அரசு மட்டும் செய்து முடித்து விட முடியாது. தன்னார்வலர்கள் செய்யும் பணியானது சாதாரணமானது அல்ல. சென்னை முதல் கன்னியாகுமரி வரை தன்னார்வலர்களின் உதவிதான் சுனாமி நேரத்தில் சோகத்தைத் தீர்த்து வைத்தது. எனவே, இப்போதும் நாம் அவர்களை அனுமதிக்க வேண்டும். தற்போது ஆளும் அரசு இதில் அரசியல் செய்கிறது.

இந்தியாவில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள தமிழ்நாட்டிற்கு வெறும் 510 கோடி ரூபாயை மட்டுமே மத்திய அரசு வழங்கியுள்ளது. ஆறாவது இடத்தில் இருக்கும் உத்தரப் பிரதேசத்துக்கு 960 கோடி ரூபாய் கொடுத்துள்ளார்கள். மக்கள் தொகை அடிப்படையில் கொடுப்பது தவறு. பாதிப்பின் அளவை வைத்தே நிதியைக் கொடுக்க வேண்டும். இதை யோசிக்காமல் மத்திய அரசு செய்துள்ளது.

தமிழ்நாடு அரசு கொடுக்கக் கூடிய ஆயிரம் ரூபாய் பொதுமக்களுக்கு போதுமானதாக இல்லை. ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்தபட்சம் 5 ஆயிரம் ரூபாய் வழங்குவதுதான் சரியானது" என்றார்.

இதையும் படிங்க: போன் செய்தால் வீட்டிற்கே வந்து பணியைக் கச்சிதமாகச் செய்துமுடிக்கும் முடித்திருத்துநர்கள்!

Last Updated : Apr 16, 2020, 3:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.