ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @9PM - E TV BHARAT

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம் இதோ....

9 மணி செய்திச் சுருக்கம், E TV BHARAT TAMILNADU, Top 10 news
9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @9PM
author img

By

Published : May 16, 2021, 9:38 PM IST

1. இன்று 33 ஆயிரம் பேருக்கு கரோனா: சென்னையில் 3ஆவது நாளாக பாதிப்பு குறைவு

தமிழ்நாட்டில் புதிதாக 33 ஆயிரத்து 181 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் கரோனாவால் 311 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனாவிலிருந்து 21 ஆயிரத்து 317 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

2. கரோனா பரவலைத் தடுக்க அனைத்துக் கட்சி குழு: தமிழ்நாடு அரசு அதிரடி!

தமிழ்நாட்டில் கரோனா பரவலைத் தடுப்பதற்காகவும்; அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காகவும் முதலமைச்சர் தலைமையில் 13 கட்சிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

3. மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி போட சிறப்பு ஏற்பாடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி போடுவதற்குத் தேவையான சிறப்பு ஏற்பாடுகளை செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

4. காஸாவில் இயங்கும் சர்வதேச ஊடக அலுவலகங்களைத் தாக்கிய இஸ்ரேல்: பின்னணி என்ன?

காஸா நகரில் அல்ஜசீரா, அசோசியேட்டட் பிரஸ் உள்ளிட்ட பல்வேறு ஊடகக் குழுக்களின் அலுவலகங்களைக் கொண்ட ஒரு கட்டடத்தை இஸ்ரேல் அரசு வான்வழித்தாக்குதலால் தரைமட்டமாக்கியுள்ளது.

5. நாடு முழுவதும் 6,000 ரயில் நிலையங்களில் இலவச வைஃபை!

நாட்டில் இலவச வைஃபை திட்டத்தின் கீழ் பயன்பெறும் ரயில் நிலையங்களின் எண்ணிக்கை ஆறாயிரத்தை எட்டியுள்ளது.

6. 'நாள்தோறும் தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கை குறைவது ஏன்...’ - ப. சிதம்பரம் கேள்வி

நாள்தோறும் தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கை குறைவது ஏன் என மத்திய அரசுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

7. EXCLUSIVE: தடுப்பூசி போட்டு ரத்தம் உறையாமல் இருக்க மாத்திரை - மருத்துவர் சங்கத் தலைவர்

தடுப்பூசி போடுவதற்கு முன்னர் ரத்தம் உறையாமல் இருக்க மாத்திரை எடுத்துக்கொள்ளலாம் என தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் சிஎம்கே ரெட்டி தெரிவித்துள்ளார்.

8. புதுவையில் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் கொடுக்க அனுமதி

கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் மருந்து கொடுப்பதற்கு சுகாதாரத்துறை அனுமதி அளித்துள்ளது.

9. கரோனாவால் பாதிக்கப்பட்ட கணவனுக்கு நீதி கேட்ட நவீன கண்ணகி

"கரோனாவால் பாதிக்கப்பட்ட தன் கணவனை மருத்துவமனையில் அட்மிட் செய்யவே 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார்கள். நோயாளிகள் படுக்கையிலேயே சிறுநீர் கழிக்கிறார்கள். அவர்களுக்கான போதிய வசதிகள் இல்லை" என பெண் ஒருவர் பரபரப்பு குற்றஞ்சாட்டியுள்ளார்.

10. பால் டேம்பரிங் முறைகேடு: மீண்டும் விசாரணை நடத்த தயார்!

பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் ஏதேனும் புதிய தகவல் அளிக்கப்படும்பட்சத்தில், மீண்டும் விசாரணை நடத்த நாங்கள் தயார் என ஆஸ்திரேலியா கிரிக்கெட் சங்கம் (சிஏ) அறிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.