க. அன்பழகன் மறைவைத் தொடர்ந்து, திமுக பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகனை தேர்வுசெய்ய ஏற்பாடுகள் நடைபெற்றன. இதையடுத்து அவர் தான் வகித்த பொருளாளர் பதவியை ராஜினாமா செய்தார்.
திமுக விதிகளின்படி பொதுச்செயலாளர் பதவிக்குத் தேர்வுசெய்வதற்குப் பொதுக்குழுக் கூட்டம் கூடி முடிவுசெய்ய வேண்டும். இதற்கிடையில் கரோனா பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவில்லை.
இதனிடையே, திமுக தலைவர் ஸ்டாலின் காணொலி கட்சி மூலம் திமுக பொதுக்குழுக் கூட்டம் நடத்த ஆலோசனை நடத்தியாகத் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் இன்று ஸ்டாலின் அறிக்கை ஒன்றினை வெளியிட்டார். அதில், ”திமுக பொதுக்குழுக் கூட்டம் கூடும்வரை திமுக விதி 18இன்கீழ் திமுக பொருளாளராக துரைமுருகன் நீடிப்பார்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: கருணாநிதியின் சாதனை சுவடுகள் என்றும் மறையாது - இயக்குநர் சுசீந்திரன்