ETV Bharat / state

ஆசிரியர் பட்டயப் படிப்பில் சேர மதிப்பெண் உயர்த்தி அரசு அறிவிப்பு! - Chennai

சென்னை: ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள், பட்டயப் படிப்பில் சேருவதற்கு மதிப்பெண்ணை உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

dte-admission
author img

By

Published : May 31, 2019, 8:46 AM IST

Updated : May 31, 2019, 9:14 AM IST

தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களின் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பினை இரண்டு ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்.

2002-03ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் பட்டயப் படிப்பில் சேர்வதற்கு ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியர், பழங்குடியினருக்கு பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றாலே போதுமானது எனவும், பிற வகுப்பினர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சிபெற்று 45 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என அரசு அறிவித்தது.

தற்போது உள்ள விதிமுறைகளின் அடிப்படையில் பட்டயப்படிப்பு முடித்த ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு சேர்வதற்கு மீண்டும் ஒரு போட்டித் தேர்வினை எழுத வேண்டும். இந்நிலையில் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு முடித்துவிட்டு தற்போது ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதுவதற்கு ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 341 பேர் பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்காக தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிட்டுள்ளதாவது:

தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தின் 2014ஆம் ஆண்டு வெளியிட்ட அறிவிப்பின்படி, தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு 2019-20ஆம் கல்வி ஆண்டு முதல் பொதுப்பிரிவினருக்கு பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் 50 விழுக்காடு மதிப்பெண்களும் - ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோர் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் 45 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

அதேபோல், உடனடி சிறப்புத் தேர்வில் தேர்ச்சிபெற்ற மாணவர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Intro:ஆசிரியர் பட்டயப் படிப்பில் சேர
மதிப்பெண் உயர்த்தி அரசு அறிவிப்பு

Body:சென்னை, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பாடம் நடத்து வதற்கான பட்டய படிப்பில் சேரும் மாணவர்களுக்கான மதிப்பெண்ணை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் தொடக்கக் கல்வி பட்டய படிப்பினை இரண்டு ஆண்டுகள் படித்திருக்க வேண்டும். மேலும் தற்ப்பொழுதுள்ள விதிமுறைகளின் அடிப்படையில் அவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு சேர்வதற்கு மீண்டும் ஒரு போட்டி தேர்வினை எழுத வேண்டும்.
தமிழகத்தில் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு முடித்துவிட்டு ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதுவதற்கு ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 341 பேர் பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் தற்பொழுது 12 மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களும், எட்டு அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும், மாறு ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும், 29 அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும், 247 தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
இந்த ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் கடந்த 2002 -2003 ஆம் கல்வி ஆண்டு முதல் ஆசிரியர் பட்டய பயிற்சியில் சேர்வதற்கு ஆதி திராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியர், பழங்குடியினருக்கு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றாலே போதுமானது எனவும், பிற வகுப்பினர்கள் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என அரசு அறிவித்தது.
இதன் அடிப்படையில் கடந்த ஆண்டு வரை மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது. ஆசிரியர் பட்டயப் படிப்பிற்கு தற்போது வேலை இல்லை என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் மாணவர்கள் இந்த படிப்பில் சேர்வதில் ஆர்வம் காட்டுவதில்லை.
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் ஒரே முறையில் தேர்ச்சி பெற முடியாத சில மாணவர்கள் இந்தப் படிப்பில் சேர்ந்து பயின்று வந்தனர். கடந்தாண்டு நடைபெற்ற கலந்தாய்வில் 9000 இடங்களில் சுமார் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட இடங்களில் மாணவர்கள் சேர்ந்தனர்.
இந்த நிலையில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்காக தமிழக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளது, தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தின் 2014 அறிவிப்பின்படி தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு 2019-20 கல்வி ஆண்டு முதல் பொதுப்பிரிவினருக்கு பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் 50 சதவீத மதிப்பெண்களும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ,மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோர் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் 45 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
அதேபோல் உடனடி சிறப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என அதில் கூறியுள்ளார்.
தரமான ஆசிரியர்களை உருவாக்குவதற்காக அரசு ஆணை வெளியிட்டிருந்தாலும், 50 சதவீதம் வரை மதிப்பெண் பெறும் மாணவர்கள் வேலை இல்லாத இந்தப் படிப்பில் சேர்வார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Conclusion:
Last Updated : May 31, 2019, 9:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.