ETV Bharat / state

தமிழ்நாட்டில் இன்று முதல் வறண்ட வானிலை! - இன்னைக்கு மழை வருமா

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Dry
Dry
author img

By

Published : Jan 1, 2023, 3:18 PM IST

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று(ஜன.1) வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வறண்ட வானிலையே நிலவக்கூடும். வடதமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

கிழக்குத் திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, வரும் 3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை, தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: New year 2023: புத்தாண்டை உற்சாகமாக வரவேற்ற மக்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.